3 படம்தான் கமிட்.. ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள சொத்துக்களாய் வாங்கி குவிக்கும் லாஸ்லியா!
சென்னை: நடிகை லாஸ்லியா மூன்று படங்களில் மட்டுமே கமிட்டாகியுள்ள நிலையில் அவர் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மரியநேசன். இவர் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்து மூன்றாவது இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது சக போட்டியாளரான கவினை காதலித்தார்.

காதல் பிரேக் அப்
பிக்பாஸ் வீட்டில் இருந்த போது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கவினை காதலித்து வந்தார் லாஸ்லியா. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினை ஏறேடுத்துக் கூட பார்ப்பதில்லை. இருவருக்கும் இடையிலான காதல் முறிந்துவிட்டதாக தகவல் வெளியானது.

நடித்தீர்களா
இந்நிலையில் நடிகை லாஸ்லியா தனது போட்டோக்களுக்கு ஷேர் செய்யும் கேப்ஷன்கள் அனைத்தும் கவின் ஏதோ அவரை ஏமாற்றியது போன்றே உள்ளது. இதனை பார்த்த கவின் ரசிகர்கள், பிக்பாஸில் கவினை காதலிப்பது போன்று நடித்தீர்களா என விளாசி வருகின்றனர்.

மூன்று படங்கள்
இந்நிலையில் லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட்டாகி உள்ளார். ஹர்பஜன் சிங், அர்ஜூன், சதீஷ் ஆகியோர் நடிக்கும் ஃபிரண்ட்ஷிப் படத்தில் நடித்து வரும் லாஸ்லியா அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

முதல் படத்துக்கே..
எடுத்த எடுப்பிலேயே லாஸ்லியா தன்னுடைய படங்களுக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியானது. அறிமுக நடிகையாக உள்ளபோதே இவ்வளவு சம்பளமா என சமூக வலைதளங்களில் பெரும் பேச்சு அடிப்பட்டது. இதற்கு காரணம் பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழே என கூறப்பட்டது.

சொந்த ஊரில் சொத்து
முதல் 2 படங்களுக்கு அவர் 25 லட்சம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் மூன்றாவது படத்திற்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகை லாஸ்லியா தனது சொந்த ஊரில் சொத்துக்களை வாங்கி குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ரொம்பவே விவரம்
லாஸ்லியா, சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கேட்ட ரசிகர்கள் நடிகை ரொம்பவே விவரம், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறார் என கூறி வருகின்றனர்.
Recommended Video

கவினும் வந்தால்..
இதனிடையே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில், கடந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர் என்ற அடிப்படையில் கெஸ்ட்டாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி லாஸ்லியா வரும் போது கவினும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தால் நல்லா இருக்கும் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











