அவ்வளவுதான் மார்க்கெட்டே போச்சா.. இன்ஸ்டாவில் களமிறங்கும் லாஸ்லியா? கைகொடுக்குமா இந்த படம்!
சென்னை: இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி பின் நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்த்த லாஸ்லியாவிற்கு படங்கள் எதுவும் பெரிதாக அமையவில்லை.இருந்தாலும் விடாமல் முயற்சி செய்து வரும் இவர் இணையத்தில் ஆக்டிவாக போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
நடிகை லாஸ்லியா திரிகோணமலையில் தனது படிப்பை முடித்தார். இதன் பின் ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்த இவர், அந்த வேலையை விட்டு சக்தி தொலைக்காட்சியில், செய்திவாசிப்பாளராக இருந்தார். இதையடுத்து, குட் மார்னிங் ஸ்ரீலங்கா உள்ளிட்ட சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் லாஸ்லியாவிற்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கொஞ்சும் இலங்கை தமிழில் க்யூட்டாக பேசி ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் திருப்பினார். ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல், சக போட்டியாளரான கவினை காதலித்து காதல் கிசு கிசுவில் சிக்கினார்.

பேசப்படவில்வைல: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இரண்டு படங்களில் அடுத்தடுத்து கமிட்டானார் லாஸ்லியா. இதில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரெண்ட் ஷிப் படத்தில் நடித்தார். இந்த படம் ஓரளவுக்கு ஓடியது. இதையடுத்து, மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்தார். இதில், பிக் பாஸ் வீட்டில் தன்னுடன் இருந்த தர்ஷனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.

Mr ஹவுஸ் கீப்பிங்: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 1.6 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார். இவருக்கு பட வாய்ப்பு இல்லாததால், எப்படியாவது படவாய்ப்பை பெற உடல் எடையை குறைத்தும், கவர்ச்சி காட்டியும் வருகிறார். எடுத்த முயற்சி வீண் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இவர், Mr ஹவுஸ் கீப்பிங் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதில் youtube பிரபலம் ஹரி பாஸ்கர் தான் ஹீரோவாக நடிக்க, படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தை பல நல்ல தமிழ் படங்களை தயாரித்து வழங்கிய தேனாண்டாள் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்துள்ளது. அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த லாஸ்லியாவிற்கு இந்த படமாவது கைக்கொடுக்குமா என்று பொருத்து இருந்து பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications











