ஆத்தாடி.. முதல் படத்திலேயே லாஸ்லியா இத்தனை லட்சங்களை வாங்கினாரா? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: லாஸ்லியா தனது முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
இலங்கையை சேர்ந்தவர் லாஸ்லியா மரிய நேசன். இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்த லாஸ்லியா போக போக ஆட்டியூட் காட்ட ஆரம்பித்தார்.

கவினுடன் காதல்
மேலும் சக போட்டியாளரான கவினையும் காதலித்தார் லாஸ்லியா. நள்ளிரவில் இருவரும் மைக்கின் பேட்டரியை கழட்டி வைத்துவிட்டு பேசும் அளவுக்கு போனது அவர்களின் காதல். இதற்காக கமலில் கண்டனங்களை இருவரும் பெற்றனர்.

கவினுடன் பழக்கம்
ஆனால் லாஸ்லியாவின் காதல் அவரது பெற்றோருக்கு பிடிக்க வில்லை. இதனால் பத்தாண்டுகளுக்கு பிறகு மகளை பார்த்த போதும் அவரது முகத்தை ஏறேடுத்துக்கூட பார்க்காமல் கடும் கோபத்தை காட்டினார். இருப்பினும் கவினிடம் தொடர்ந்து பழகி வந்தார் லாஸ்லியா.

காதல் முறிவு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது இடத்தை பிடித்த லாஸ்லியா, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு கவினுடனான தொடர்பை துண்டித்தார். அதோடு நேராக சந்திக்கும் பல நிகழ்ச்சிகளிலும் அவரிடம் பேசுவதை தவிர்த்தார்.

சம்பளம்
இதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கும் ஃபிரண்ட்ஷிப் படத்தில் நடித்து வருகிறார் லாஸ்லியா. இந்நிலையில் லாஸ்லியா ஃபிரண்ட்ஷிப் படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மற்றொரு படம்
அதாவது தனது முதல் படமாக ஃபிரன்ட்ஷிப் படத்திற்காக நடிகை லாஸ்லியா 25 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதேபோல் நடிகர் ஆரி மற்றும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் லீட் ரோலில் நடிக்கும் படத்திலும் நடிகை லாஸ்லியா நடித்து வருகிறார்.

போட்டோ ஷூட்
இந்தப் படத்திற்கும் நடிகை லாஸ்லியா 25 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து நடிகை லாஸ்லியா படங்களில் நடித்து வருகிறார். அதோடு தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











