அய்யோ.. சிரிக்காத ஆத்தா பயமா இருக்கு.. லாஸ்லியாவின் புதிய போட்டோவை பார்த்து பங்கம் செய்த வலைவாசிகள்!
சென்னை: நடிகை லாஸ்லியாவின் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கம் செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளராக கலந்து கொண்ட லாஸ்லியா அதன் பிறகு நடிகையாகி விட்டார்.
ஹர்பஜன் சிங்குடன் ஃபிரண்ட்ஷிப் உட்பட அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார் லாஸ்லியா.

குத்தலாகவே கேப்ஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கவினை காதலித்த லாஸ்லியா பின்னர் அவருடனான காதலை துண்டித்துவிட்டார்.
அதோடு சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை ஷேர் செய்யும் போதெல்லாம் குத்தலாகவே கேப்ஷன் கொடுத்து வருகிறார் லாஸ்லியா.

வச்சு செய்கின்றனர்
குறிப்பாக கவின் அவரை ஏமாற்றியது போலவே இருந்து வருகிறது அவர் கொடுக்கும் கேப்ஷன்கள். ஏற்கனவே பிக்பாஸில் கவின் ரசிகர்களால்தான் மூன்றாவது இடத்தை பிடித்தார் லாஸ்லியா. தற்போது கவினையே சீண்டுவதால் அவரது ரசிகர்கள் செம காண்டாகியிருக்கிறார்கள். லாஸ்லியா என்ன பதிவை ஷேர் செய்தாலும் அவரை வச்சு செய்து வருகின்றனர்.

உடம்புக்கு ஆகாது
அந்த வகையில் அண்மையில் லைட் நீல நிற டாப்ஸில் ஃபுல் மேக்கப்பில் போட்டோ ஷுட் நடத்தியிருந்தார் லாஸ்லியா. அதனை பார்த்த நெட்டிசன்கள், ப்பா என்றும் ஓவர் மேக்கப் உடம்புக்கு ஆகாது என்றும் விளாசியிருந்தனர்.

அசத்தல் போஸ்
இதனை தொடர்ந்து கறுப்பு பிளேஸரில் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தியிருந்தார். அதையும் கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். இந்நிலையில் வெள்ளை மற்றும் பச்சை நிற காம்பினேஷனில் அசத்தலாய் போஸ் கொடுத்துள்ளார் லாஸ்லியா.
Recommended Video

பயமா இருக்கு
அதனை பார்த்த நெட்டிசன்கள், சின்னக்கவுண்டர் படத்தில் கவுண்டமணி மனோரமாவிடம் சொல்வதை போல் ஆத்தா சிரிக்காத ஆத்தா பயமா இருக்கு என கமெண்ட் பதிவிட்டு பங்கம் செய்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் உங்கள் முகத்தை பார்க்கவே இரிட்டேட்டிங்காக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











