ஸ்லீவ்லெஸ்லில்… கவுனை சுற்றியபடி ஆட்டம் போட்ட லாஸ்லியா… வைரல் வீடியோ !
சென்னை : பிக் பாஸ் லாஸ்லியா க்யூட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவிற்கு சோசியல் மீடியாவில் லைக்குகள் குவித்து வருகின்றன.
பல ரசிகர்கள் அவரை தாறுமாறாக வர்ணித்து கவிதை எழுதி வருகின்றனர்.

பட்டி தொட்டி எங்கும்
பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் இந்த பிக்பாஸ் தொடரின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.

லாஸ்லியா காதல்
பிக் பாஸ் வீட்டுக்குள் கவின் லாஸ்லியா காதல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிக்கை உயர்த்தியது. வெளியே வந்ததும் அந்த காதல் போசுக்குனு போச்சு. இருவரும் அடுத்தடுத்து படங்களில் படுபிஸியாக நடித்து வருகின்றனர்.
ஹீரோயினாக
லாஸ்லியா ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ப்ரண்ரட் ஷிப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதனை தொடர்ந்து ஆரி நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அடுத்ததாக ராட்சசன் உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த Axxess பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திலும், ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் படத்திலும் லாஸ்லியா நடிக்கிறார்.
Recommended Video

ஸ்லீவ்லெஸ்லில்
சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா படு மார்டனாக மாறிவிட்டார். முன்பை விட இவரது படங்களில் சற்று கவர்ச்சி தலைக்காட்ட ஆரம்பித்துள்ளது. தற்போது இவர் பச்சை நிற ஸ்லீவ்லெஸ்லில் கவுனை சுற்றிவிட்டு ஆட்டம் போட்ட வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











