திட்டி தீர்த்த நெட்டிசன்ஸ்.. கடுப்பான லாஸ்லியா.. என்ன காரியம் செய்திருக்கார் பாருங்க!

சென்னை: நெட்டிசன்கள் திட்டி தீர்ப்பதால் கடுப்பான நடிகை லாஸ்லியா தனது சமூக வலைதள பக்கத்தில் கமெண்ட் ஆப்ஷனையே தூக்கியுள்ளார்.

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் லாஸ்லியா.

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகையாகி விட்டார்.

கதறி அழுதார்

கதறி அழுதார்

அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட்டாகியுள்ள லாஸ்லியா, தனது சொந்த ஊரில் சொத்துக்களை வாங்கிக் குவிப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சக போட்டியாளரான கவினை காதலிப்பதாக கூறினார். கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறிய போது கூட தன்னையும் வெளியேற்றுமாறு கதறி அழுதார்.

கண்டு கொள்ளவில்லை

கண்டு கொள்ளவில்லை

பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கவினை காதலித்து வந்தார் லாஸ்லியா. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு கவினை திரும்பிக்கூட பார்ப்பதில்லை லாஸ்லியா. இருவரும் சேர்ந்து பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட கவினை கண்டுகொள்வதில்லை லாஸ்லியா.

கேப்ஷன்

கேப்ஷன்

கவினுடனான காதல் குறித்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் லாஸ்லியா பதில் சொல்வதில்லை. மாறாக கவின் தன்னை ஏமாற்றியது போல் பதிவுகளை ஷேர் செய்து வந்தார். தான் ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவுக்கும் கவினை தாக்குவது போலவே கேப்ஷன் கொடுத்து வந்தார்.

திட்டிய ரசிகர்கள்

திட்டிய ரசிகர்கள்

இதனால் கடுப்பான கவினின் ரசிகர்கள், நீங்கள் பிக்பாஸில் அத்தனை நாட்கள் இருந்ததற்கு காரணமே கவின்தான், கவினுக்காக தான் நாங்கள் உங்களை சப்போர்ட் செய்தோம், இப்போது அவரை சீண்டுகிறீர்களா என திட்டி தீர்த்தனர். மேலும் காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா என்றும் சாடினர்.

கமெண்ட் ஆப்ஷன்

கமெண்ட் ஆப்ஷன்

ஒரு காலத்தில் வெறும் பாஸிட்டிவ் கமெண்டுகளை மட்டுமே பெற்று வந்த லாஸ்லியா, சமீப காலமாக அதிகளவில் நெகட்டிவ் கமெண்டுகளையே அதிகம் பெற்று வருகிறார். அவரை திட்டுவதற்கு என்றே பலரும் கமெண்ட் ஆப்ஷனை தேர்வு செய்கின்றனர்.

கமெண்டே இல்லை

கமெண்டே இல்லை

இதனால் கடுப்பான லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் ஆப்ஷனை முடக்கி வைத்துள்ளார். இதனால் அவர் ஷேர் செய்யும் வீடியோக்களுக்கும் போட்டோக்களுக்கும் கமெண்டுகள் இல்லை. சமீபத்தில் அவர் ஷேர் செய்த கிஃப்ட் வீடியோக்கள் மற்றும் அவர் லேசர் ட்ரீமென்ட் பெற்ற போட்டோக்களும் எந்த கமெண்டையும் பார்க்க முடியவில்லை.

80ஸ் லுக்..

80ஸ் லுக்..

அதே நேரத்தில் டிவிட்டரில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 80ஸ் லுக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள லாஸ்லியா, உன்ன போல ஹீரோயினா.. கண்ட உடனே ஏதோ பண்ணும்.. என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் இது எப்படி இருக்கு என்றும் கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X