விஜயுடன் நடிப்பது தவறிப்போனது எனக்கு இப்போது வருத்தம் அளிக்கிறது -நடிகை மானு

Recommended Video

ஜினியின் 3வது மகள் ? | ACTRESS MAANU INTERVIEW PART 2| V-CONNECT |FILMIBEAT TAMIL

சென்னை: காதல் மன்னன் படத்தில் நடித்த நாயகி மானு தற்போது காதல் மன்னன் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

இவர் காதல் மன்னன் படத்திற்கு பிறகு எந்த படமும் நடிக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் 'என்ன சத்தம் இந்த நேரம்' படத்தில் நான்கு குழந்தைகளின் அம்மாவாக நடித்தார். மோகன் ராஜாவும் அந்த படத்தில் அப்பாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

actress maanu on missing vijay movie

காதல் மன்னன் படம் 1998ல் வெளியானது ,இயக்குனர் சரனுக்கு முதல் படம் இதுதான் மேலும் இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கும் முதல் படம் இதுதான். மாபெரும் இசை கலைஞர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கும் நடிப்பு ரீதியாக முதல் படம் இதுதான். இந்த படத்தின் மூலம் தான் நடிகை மானுவும் சினிமாவிற்கு அறிமுகமானார்.

நடிகை மானு தான் எப்படி சினிமாக்குள் வந்தேன் எப்படி பட அனுபவம் இருந்தது என்பதையெல்லாம் தற்போது பேட்டியின் போது பகிர்ந்துள்ளார். மானு அசாம் மாநில குவஹாட்டியை சேர்ந்தவர். இவர் பரதநாட்டிய கலைஞர் ,காதல் மன்னன் படத்திற்கு கதாநாயகி தேடி கொண்டிருக்கும் போது எதேச்சையாக விவேக் இவரை பார்த்து இவரின் நடன குருவிடம் மானுவை நடிக்க கேட்டுள்ளார்.

இதற்கு முதலில் மானு சம்மதிக்கவில்லை மேலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வந்து கேட்க மானு தந்தை இதை நீ கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கலாம் என்று கூறி படத்தில் நடிக்க வைத்தார் என்று மானு கூறினார். மேலும் படப்பிடிப்பு அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது தனக்கு ஒன்றும் புரியவில்லை என்று கூறிக்கொண்டே இருந்தேன் என்றும் கூறினார்

actress maanu on missing vijay movie

அஜீத் நல்ல நடிகர் அவர் சிறப்பாக நடித்தார் ,என்னுடன் நடித்த விவேக் ,எம் எஸ் .விஸ்வநாதன் மற்றும் கிரீஸ் ஆகியோர் சிறப்பாக நடித்தார்கள். நான் மட்டும் எதுவும் தெரியாமல் முழித்து கொண்டு இருந்தேன். பல நேரங்களில் என்னாலே படப்பிடிப்பு மிகவும் தாமதமாகும் என்று கூறினார் மானு .

படம் வெளியிடும் சமயத்தில் தான் தனது சொந்த ஊரான அசாமிற்கே சென்று விட்டேன். அதற்கு பின் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். ஆனால் எனக்கு படம் நடிப்பதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்பதனால் யாருக்கும் நான் செவிகொடுக்கவில்லை. அதற்கு பிறகு ஒரு முறை தளபதி விஜயின் மேலாளர் கூட விஜய் படத்திற்காக வந்து தன்னிடம் நடிக்க கேட்டதாகவும் ஆனால் அதையும் ஏற்காமல் மறுத்து விட்டேன் என்று மானு கூறினார். ஆனால் தற்போது அந்த பெரிய வாய்ப்புகளை இழந்ததை என்னி வருந்துகிறேன் என்றும் தெரிவித்தார்.

பல வருடங்கள் கழித்து மோகன் ராஜவுடன் என்ன சத்தம் இந்த நேரம் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று மானு கூறினார். சென்னை பெசன்ட் நகரில் வசிக்கும் மானு இன்று வரையிலும் அஜித் குடும்பத்துடன் ஒற்றுமையாகத்தான் இருக்கிறேன் என்றும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X