twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லவ்லி பாய் மாதவன்.. 50வது பிறந்த நாள்..திரைப்பிரபலங்கள் வாழ்த்து !

    |

    சென்னை: பெண்களின் கனவு நாயகன் மேடி மாதவன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். திரை பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

    தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்தி சினிமாவிலும் தனக்கென ஒரு ரசிகைகள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் மாதவன்.

    50 வயது ஆனாலும் என்றும் மாறா இளமையுடன் , அதே துடிப்புடன் இருக்கறார் மாதவன். அவரின் இளமையின் ரகசியம் என்ன. இவரால் மட்டும் எப்படி இது சாத்தியம் என்பது பலரின் சந்தேகமாகவே உள்ளது.

    ஆபாச காட்சிகள்.. சர்ச்சை வசனங்கள்.. காட்மேன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது பாய்ந்தது வழக்கு!ஆபாச காட்சிகள்.. சர்ச்சை வசனங்கள்.. காட்மேன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது பாய்ந்தது வழக்கு!

    பெண்களின் கனவு நாயகன்

    பெண்களின் கனவு நாயகன்

    ஹிந்தி சீரியல்கள், படங்களில் நடித்துக் கொண்டிருந்த மாதவன் தமிழில் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் 2000ம் ஆண்டு அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இவ்வாறு அறிமுகமான நடிகர் மாதவன் குறுகிய காலத்திலேயே தனக்கான ஒரு இடத்தைப் பற்றி கொண்டார் முக்கியமாக பெண்களின் கனவுக் நாயகனாக பல வருடங்களாக இருந்து வருகிறார். இவருக்கு ரசிகர் கூட்டத்தை விட ரசிகைகள் கூட்டமே அதிகம்.

    சிறந்த நடிகர்

    சிறந்த நடிகர்

    அலைபாயுதே, மின்னலே, டும் டும் டும், ரன் போன்ற படங்களில் தொடர்ந்து காதல் நாயகனாக வலம் வந்த மாதவன் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் ஒரு குழந்தையின் தகப்பனாகவும், ஒரு எழுத்தாளராகவும் மிகவும் நேர்த்தியாக நடித்திருந்தார். ஈழத் தமிழர்கள் பற்றிய அந்த படத்தில் வேறுவிதமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மாதவன். அந்த படமும் ஹிட்டித்தது.

    முரட்டுத்தனம்

    முரட்டுத்தனம்

    லவ்லி பாயாக மட்டுமே நடித்துக்கொண்டிருந்த மாதவன், மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து என்ற படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஆக்சனில் மாஸ் காட்டினார். தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வந்த இவர் திடீரென ஆக்சனுக்கு மாறியது ரசிகர்களுக்கு சற்று வியப்பாகவே இருந்தது. எனினும் அதையும் ரசித்து "சண்டக்கோழி சண்டக்கோழி" என்று அந்தப் படத்தில் வரும் பாடலை பாடிக்கொண்டு, மாதவனின் முரட்டுத்தனமான காதலையும் ரசிக்க தொடங்கினர்.

    இந்தியிலும் கலக்கினார்

    இந்தியிலும் கலக்கினார்

    அதேசமயம் இவர் இந்தியிலும் பல படங்களில் நடித்து கொண்டிருந்தார். தமிழில் வெளியான ப்ளாக் பஸ்டர் படமான நண்பன் படம் ஹிந்தியில் 3 இடியட்ஸ் என்று உருவாகியிருந்தது. அதில் ஸ்ரீகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் மாதவன் அமிர்கான் உடன் சேர்ந்து நடித்திருப்பார். மேலும் ஹிந்தியில் தானு வெட்ஸ் மானு போன்ற பல படங்களில் நடித்து அங்கும் தனது கொடியை பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்.

    பொக்கிஷம்

    பொக்கிஷம்

    கமல்ஹாசன் கெரியரிலும் மாதவன் கெரியரிலும் தவிர்க்க முடியாத ஒரு படம் என்றால் அது "அன்பே சிவம்". இந்த படம் வெளிவந்த புதிதில் சரியான வரவேற்பை பெறாத நிலையில் இப்பொழுதும் பல ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தப் படத்தைப் போய் தவறவிட்டு விட்டோமே என இன்றும் பலரின் பேச்சுக்களை கேட்க முடிகிறது. மாதவன் திரைத்துறையில் அன்பே சிவம் நிச்சயம் ஒரு பொக்கிஷமாகத்தான் இருக்கும் என்று கருதப்படுகிறது.

     பாக்ஸராக மிரட்டினார்

    பாக்ஸராக மிரட்டினார்

    இவ்வாறு தனது நடிப்புத் திறமையால் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த மாதவன். சிறிது காலம் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இடைவெளி விட்டு இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் "இறுதிச்சுற்று" என்ற படத்தில் பாக்ஸராக மீண்டும் வெறித்தனமாக கம்பேக் கொடுத்தார். இந்த முறை நாம் பார்த்த மேடி மாதவனாக இல்லாமல் வேறு விதமான மாதவன் தோன்றி இருந்தார். இந்த படத்தில் மாதவனின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. பின் இந்த படம் தெலுங்கில் நடிகர் வெங்கடேஷை வைத்து ரீமேக் செய்யப்பட்டது.

    மாதவன் விஜய் சேதுபதி

    மாதவன் விஜய் சேதுபதி

    "விக்ரம் வேதா" ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு படம், இந்த படத்தை பார்த்த பலரும் மாதவனையும், விஜய்சேதுபதியும் வெகுவாக பாராட்டி வந்தனர். போலீஸ், ரவுடி என இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்துள்ள படமாக இது இருக்கும். விக்ரம் வேதாவில் உள்ள முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால் இதில் யார் ஹீரோ யார் வில்லன் என்று நம்மால் கணிக்கவே முடியாது. இருவருடைய வாழ்க்கையிலும் அவரவர் வாழ்க்கையில் அவர்தான் ஹீரோ என்று வடிவமைக்கப்பட்டிருக்கும் இதுதான் இந்த படத்தோட மிகப்பெரிய பிளஸ். அந்த பிளஸ் தான் இந்த படத்தை மிகப்பெரிய வெற்றிக்கு கொண்டு சென்றது.

    இன்று பிறந்த நாள்

    இன்று பிறந்த நாள்

    தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நம் அனைவரையும் ரசிக்க வைத்த மேடி மாதவனுக்கு இன்று 50வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளையோட்டி அவரின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைவரும் சமூக வலைதளத்தின் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர். கனவு நாயகன் மேடிக்கு நாமும் ஒரு வாழ்த்து சொல்லிவிடுவோம். ஹாப்பி பர்த்டே மேடி!

    English summary
    Actor Madhavan Celebrates his 50th birthday today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X