இந்த நடிகையை நியாபகம் இருக்கா? அம்மாவை மிஞ்சும் அழகில் மகள்கள்.. மாதவியின் குடும்ப போட்டோ!

சென்னை: 80 மற்றும் 90 காலகட்டத்தில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் கண்ணழகி நடிகை மாதவி. பல வெற்றிப்படங்களில் நடித்து டாப் நடிகையாக இருந்த இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி, குடும்பம், குழந்தைகள் என வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கும் நிலையில், அவர்களின் சமீபத்திய போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அழகே அழகு.. தேவதை.. ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் என ராஜபார்வை படத்தில் கமல்ஹாசன் நடிகை மாதவியின் அழகை வர்ணித்து பாட்டுப்பாடி இருப்பார். அந்த பாடலில் வரும் அத்தனை அழகிற்கும் சொந்தக்காரராக இருந்தவர் தான் நடிகை மாதவி. தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தில்லுமுல்லு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கால் அடி எடுத்துவைத்தார்.

Madhavi photos

நடிகை மாதவி: அவர் நடித்த முதல் திரைப்படமே வெற்றிப்படமாக அமைந்ததால், ராஜபார்வை, டிக் டிக் டிக், தம்பிக்கு எந்த ஊரு, காக்கி சட்டை என பல படங்களில் நடித்த இவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோயினாக இருந்தார். நடிகை மாதவியின் கண்ணழகுக்கு மயங்கிய பல இளசுகள் சதா இவரின் போட்டோக்களை கையில் வைத்துக்கொண்டு அலைந்த கதையும் உண்டு.

Madhavi photos

திருமணம்: இப்படி சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த இவர், 1996ம் ஆண்டு தொழிலதிபர் ரால்ப் சர்மா என்பவரை திருமணம் செய்து நியூ ஜெர்சியில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு மொத்தமாக விலகிய இவர், கணவன், குழந்தைகள் என ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.மாதவி - ரால்ப் தம்பதியினருக்கு டிஃபனி கௌரிகா, பிரிசில்லா அர்பனா மற்றும் ஈவ்லின் திவ்யா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

Madhavi photos

அழகு தேவதையின் மகள்கள்: சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாதவி அவ்வப்போது குடும்பதோடு இருக்கும் போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில், தனது மகள்களின் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவை வாயை பிளந்து உச்சுக்கொட்டி பார்த்த இணையவாசிகள் மூன்று மகள்களும் தேவதைப்போல, அம்மாவை மிஞ்சும் அழகில் இருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Madhavi photos

More from Filmibeat

Read more about: madhavi photos மாதவி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X