கதைகள் சரியாக அமையவில்லை … மது ஷாலினி புது விளக்கம்
சென்னை: தமிழில் கதைகள் சரியாக அமையாததால் தமிழ் படங்களில் அதிகம் நடிக்கவில்லை என்று மதுஷாலினி தெரிவித்துள்ளார். மேலும் பஞ்சராசஷரம் படம் ஒரு வித்தியாசமான கதை அம்சம் கொண்ட த்ரில்லிங் படம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தெலுங்குசினிமா உலகில் மாடலாக இருந்து பின் ஹீரோயின் ஆனவர் மது ஷாலினி. இவர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்தார் மது ஷாலினி இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. திரையுலகிற்கு வந்த சில ஆண்டுகளிலே பாலா படத்தில் நடித்துவிட்டார் என்று பல பிரபலங்கள் இவரை வாழ்த்தினர்.

பின் பட வாய்ப்புக்கள் இல்லாததால் இந்தி திரையுலகில் கால் பதித்தார். 'டிபார்ட்மென்ட்' மற்றும் 'பூத் ரிட்டன்ஸ்' இரண்டு படங்களில் நடித்தார். அந்த படங்கள் நல்ல வரவேற்பை பெறததால் மீண்டும் சசிக்குமார் இயக்கத்தில் உருவான பிரம்மன் படத்தில் துணை நடிகையாக நடித்தார்.
இதன் பிறகு வாய்ப்பு எதுவும் வராததால், மீண்டும் தாய் மொழியான தெலுங்கு சினிமா பக்கம் திரும்பினார். மீண்டும் 2015 ஆம் ஆண்டு தமிழில் நடிக்க வாய்ப்பு வந்ததை அடுத்து, கமல்ஹாசன் நடித்த தூங்காவனம் படத்தில் நடித்தார் மது ஷாலினி. இப்படத்தில் கமல் உடன் ஒரு முத்த காட்சியில் நடித்து இருப்பார். அது படம் வெளியான போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு பிறகு பெரியதாக இவருக்கு எந்த வாய்ப்பும் தமிழில் கிடைக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு இப்போது "பஞ்சராசஷரம்" என்ற படத்தில் நடித்து வருகிறார். 'பஞ்சராக்சஷரம்' தலைப்பில் குறிப்பிடுவது போல, தீ, காற்று, நீர், பூமி, வானம் என இயற்கையை அடிப்படையாக கொண்டு கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டதாக தெரிகிறது.

இப்படத்தின் டீசர் 16ந்தேதி வெளிவந்தது இந்த டீசரை பார்த்தபோது இயற்கைக்கு அப்பாற்பட்டு சாகசம் நிறைந்த திரில்லர் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. "பஞ்சராசஷரம்" திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு மது ஷாலினி பேட்டியில் ஒன்று அளித்திருத்தார் அதில், தமிழ் சினிமாவில் அதிகம் என் நடிப்பதில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள். கதை சரியாக அமையாததால் தமிழில் நடிக்கவில்லை என்று கூறினார். அப்போது "பஞ்சராசஷரம்" படத்தில் பத்திரிகையாளராக நடித்துள்ளேன். வாய்ப்புகள் வந்தால் இங்கேயே அதாவது தமிழ் சினிமாவிலே இருப்பேன் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











