கெத்தா, ஸ்டைலா.. திரும்பி வந்த நடிகை மதுபாலா!
அக்னி தேவ் என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார் ரோஜா பட நாயகி மதுபாலா.
சென்னை: அக்னி தேவ் என்ற தமிழ் படத்தில் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார் ரோஜா பட நாயகி மதுபாலா.
1991 ஆம் ஆண்டு k.பாலச்சந்தர் இயக்கிய அழகன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் 2001 ஆண்டு திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். அதன் பின் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் 2008 இல் "கபி சொச்ச பி நா தா" என்ற ஹிந்தி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
மேலும், இவர் கடைசியாக தமிழில் மோகன் பாலாஜி இயக்கிய வாயை மூடி பேசவும் என்ற படத்தில் நடித்தார். மீண்டும் காணாமல் போய்விட்டார். இப்பொழுது மீண்டும் "அக்னி தேவ்" என்ற தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கும் இந்தப் படத்தில், பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கிறார். ரம்யா நம்பீசன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் மது பாலா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்து முதற்கட்ட ஷூட்டிங் கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படம் ஒரு அரசியல் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











