நீண்டநாட்களுக்கு பிறகு..புடவையில் பளிச்சென்று மதுபாலா.. அழகி என்று வர்ணித்த குஷ்பு !
மும்பை : சின்ன சின்ன ஆசை,சிறகடிக்க ஆசை என்று கூறி நம் மனதை கொள்ளை கொண்ட மதுபாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் மனதை அள்ளும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஹிந்தி ,தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு , கன்னடம்,மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ளார் .
தனது ஹஸ்கியான குரலாலும் ,வெகுளித்தனமான பார்வையினாலும் அனைவரையும் தன் வசம் வைத்துள்ளார் மது . இவர் நடித்த படங்களுக்கென்றே எப்போதும் ஒரு தனி மவுசு இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

அழகான எண்ட்ரி
ப்ஹூல் ஆர் காண்டே என்ற ஹிந்தி படத்தில் அஜய் தேவ்கனுடன் நடித்தாலும் , கே.பாலசந்தரின் அழகன் என்ற படமே முதலில் திரைக்கு வந்தது. அழகன் படம் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான மது , தனது சிறந்த நடிப்பாலும் , எதார்த்தமான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தார். இப்படம் அவருக்கு அழகான எண்ட்ரி என்றே சொல்லலாம் .

எதிர்பார்ப்பு
பல மலையாள படத்தில் நடித்த பிறகு, வானமே எல்லை என்ற தமிழ் படத்தில் நடித்தார் . இவரது நடிப்பு அனைவராலும் ஈர்க்கப்பட்டதினால் ,ரோஜா படவாய்ப்பு அவருக்கு கிடைத்தது . மணி ரத்னம் படம் என்றாலே அனைவருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் , அந்த எதிர்பார்ப்பை முழுமையாகவே பூர்த்தி செய்து இருப்பார் மது.

ஷங்கரின் ஜென்டில் மேன்
ரோஜா பட வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படமான ஜென்டில் மேன் படத்தில் , குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்து இருப்பார். அந்த படமும் அவருக்கு நல்ல பெயரையே பெற்று தந்தது. இன்றும் அந்த படத்தை டிவியில் போட்டால் என் வீட்டு தோட்டத்தில், உசுலம்பட்டி பெண்குட்டி பாடல்கள் மாஸ் என்று சொல்லும் அளவிற்கு ஹிட்டானது. அந்த படத்தில் அர்ஜுன், கவுண்டமணி , செந்தில்,மனோரமா போன்ற நடிகர் பட்டாளமே நடித்து இருப்பார்கள் .

தலைவி படத்தில் நடிக்கிறார்
கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்தாலும் இன்னும் பலரின் கனவு நாயகியாகவே இருக்கிறார். மிஸ்டர் ரோமியோ ,பாஞ்சாலங்குறிச்சி, இருவர் , வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்த மது இப்போது காலேஜ் குமார் , தலைவி போன்ற படங்களில் நடித்து வருகிறார் .

பிடித்த நடிகை
90'ஸ் கிட்ஸ்க்கு பிடித்த நாயகியான மது பாலா, கவர்ச்சியாக நடித்தாலும் அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருக்கிறார். அவரது சிரிப்பும்,அழகும் பலரையும் ஈர்க்கும் வண்ணமே இருக்கும். பல டிவி தொடர்களில் வந்தாலும் தனது திறமையால் இன்றும் வெள்ளித்திரையில் நிலைத்து நிற்கிறார் .

வர்ணித்த குஷ்பு
சமீபத்தில் அவர் இணையத்தளத்தில் நீல நிற புடவையுடன் அழகாக அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த படத்தை பார்த்த பல ரசிகர்களும் அவரை வர்ணித்த வண்ணம் உள்ளனர். ரசிகர்கள் மட்டும் அல்லாமல் சினிமா நட்சத்திரங்களும் இந்த புகைப்படத்தை லைக் செய்தும் கமெண்ட்ஸ் செய்தும் வருகின்றனர் . இந்த போஸ்ட்டை பார்த்த நடிகை குஷ்புவும் "அழகி"என்று வர்ணித்து உள்ளார். நீங்க நடித்த தலைவி படம் எப்போ வரும் என்று அவரது ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர் .


Click it and Unblock the Notifications











