வாவ்.. உங்களுக்கு வயசே ஆகாதா? இன்னும் அப்படியே இருக்கும் மணிரத்னம் பட நடிகை.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: நடிகை மதுபாலா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பிரமித்து போயுள்ளனர்.
நடிகை மதுபாலா தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழில் அழகன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த மதுபாலாவுக்கு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா மற்றும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் ஆகிய படங்கள் பெரும் பெயரை பெற்றுத் தந்தன.

சீரியலில் என்ட்ரி
திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகம் தலைக்காட்டாமல் இருந்த மதுபாலா, ஜெயா டிவியில் ஒளிபரப்பான சீரியலின் மூலம் மீண்டும் தலைக்காட்டினார்.
லண்டனில் இருக்கிறேன்
இந்நிலையில் நடிகை மதுபாலா, தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலாகியுள்ளார். தனது வீடியோவில் எல்லோருக்கும் குட் மார்னிங், இங்கிருக்கவும் உங்கள் அனைவருக்கும் ஹலோ சொல்லவும் எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறும் மதுபாலா லண்டனில் இருந்து ஹலோ சொல்கிறேன், சீக்கிரமே நமது நாட்டில் உங்களை சந்திக்கிறேன் என கூறியுள்ளார்.
வயதே ஆகாதா?
மதுபாலாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஜென்டில்மேன் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் க்யூட்டாக இருக்கிறீர்கள் என்றும் உங்களுக்கு வயதே ஆகாதா என்று கேட்டும் டிவிட்டி வருகின்றனர்.
50 வயதிலும்..
50 வயதிலும் அழகாக இருக்கிறீர்கள்.. இப்படியே இருங்கள் என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.
சின்ன சின்ன ஆசை மோடு
சின்ன சின்ன ஆசை மோடில் அழகாய் இருக்கீறீர்கள் மேடம் என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











