twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிய தனியார் பள்ளி.. முதல் அமைச்சர் தலையிட கோரி பிரபல நடிகை கண்ணீர்!

    By
    |

    ஐதராபாத்: ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கப்பட்ட குழந்தைகள் விஷயத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று பிரபல நடிகை மதுமிதா கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

    தமிழில், குடைக்குள் மழை படம் மூலம் அறிமுகமானவர், தெலுங்கு நடிகை மதுமிதா.

    இந்தப் படத்தை பார்த்திபன் இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது.

    அறை எண் 305-ல்

    அறை எண் 305-ல்

    இதையடுத்து தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த மதுமிதா, தமிழில், சத்யராஜின் இங்கிலீஷ்காரன், ஆணிவேர், நாளை, அறை எண் 305-ல் கடவுள், அமீரின் யோகி, தூங்கா நகரம் உள்பட பல படங்களில் நடித்தார். இவர், தெலுங்கு நடிகர் சிவ பாலாஜியை காதலித்து வந்தார். சிவபாலாஜி தமிழில், இங்கிலீஷ்காரன் படத்தில் மதுமிதாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

    தனியார் பள்ளி

    தனியார் பள்ளி

    சிவ பாலாஜியும் அவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடித்து வருகிறார் மதுமிதா. இவர்களுக்கு தன்வின் கங்குலா, ககன் கங்குலா என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் ஐதராபாத் அருகில் உள்ள மணிகொன்டாவில், தனியார் பள்ளி ஒன்றில் 6 மற்றும் முதல் வகுப்பு படித்து வருகின்றனர்.

    லாக்டவுன் காரணமாக

    லாக்டவுன் காரணமாக

    நடிகை மதுமிதாவும் அவர் கணவர் சிவபாலாஜியும் லாக்டவுன் காரணமாகக் கட்டணத்தை குறைக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். இதன் காரணமாக, அவருடைய மகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கி உள்ளது. இதுபற்றி மதுமிதா கூறியிருப்பதாவது: லாக்டவுன் காரணமாக, பெற்றோர்களால் கட்டணம் செலுத்த முடியவில்லை.

    பள்ளி நிர்வாகம்

    பள்ளி நிர்வாகம்

    என் மகன்கள் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று 240 பெற்றோர் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்தோம். எங்களுக்கு கட்டணம் செலுத்துவது பிரச்னை இல்லை என்றாலும் அவர்களுக்காக நாங்களும் குரல் கொடுத்தோம். பள்ளி நிர்வாகத்துக்கு மெயில் அனுப்பினோம்.

    ஆன்லைன் வகுப்பு

    ஆன்லைன் வகுப்பு

    இதனால் பள்ளி நிர்வாகம் எந்த காரணமும் சொல்லாமல், ஆன்லைன் வகுப்பில் இருந்து என் மகன்கள் உட்பட பல மாணவர்களை நீக்கி விட்டது. அதனால் இதை மனித உரிமை ஆணையத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். இவ்வாறு தெரிவித்து இருந்தார். மதுமிதாவின் கணவர் சிவபாலாஜியும் இதுபற்றி கூறியிருந்தார்.

    முதலமைச்சர்

    முதலமைச்சர்

    இந்நிலையில் பள்ளி நிர்வாகம் இன்னும் தங்கள் மகன்கள் உள்பட கட்டணத்தை குறைக்கச் சொன்னவர்களின் மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் சேர்க்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார். ஐதராபாத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த அவர், இந்த விவகாரத்தில் தெலங்கானா முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    மொத்த கட்டணம்

    மொத்த கட்டணம்

    அவர் கூறும்போது, அரசு டியூசன் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்று கூறியிருக்கிறது. ஆனால், மவுன்ட் லிட்டரா பள்ளி மொத்த கட்டணத்தையும் செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்று கட்டாயப்படுத்துகிறது. கொரோனா காரணமாக பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த நேரத்தில் அப்படி கட்டாயப்படுத்துவது மனித நேயமற்றது என்று கண்ணீரோடு தெரிவித்தார். உடன் அவர் கணவர் சிவபாலாஜியும் இருந்தார்.

    English summary
    Actress Madhumitha has shed tears and pleading the Chief Minister to look into the matter and put a check to the demands of Private Schools.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X