வனிதாவுக்கு சொர்ணாக்கா தங்கச்சி பீர்க்கங்கா.. ஷெரின் லெக் பீஸ்.. அதகளப்படுத்திய 'ஜாங்கிரி' மதுமிதா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய போட்டியில் நடிகை மதுமிதா சக போட்டியாளர்களுக்கு பட்டைப் பெயர் வைத்து பட்டைய கிளப்பினார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதன் முதல் நாள் எபிசோடு நேற்று ஒளிபரப்பானது.
முதல் நாளிலேயே நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. காதல், கலாட்டா என எகிற வைத்துள்ளது. நேற்றைய டாஸ்க்கில் மதுமிதா குடும்பத்தினருக்கு பட்டைப் பெயர் வைத்தார். பெயரை வைக்கும் முன்பே இது சிரிக்க மட்டுமே புண்படுத்த அல்ல என்ற பொறுப்புதுறவும் கொடுத்தார்.

சொர்ணாக்கா தங்கச்சி பீர்க்கங்கா
அதன்படி இசைக் கலைஞர் மோகன் வைத்யாவுக்கு தபேலா தாண்டவராயன் என்ற பட்டைப் பெயர் சூட்டினார் மதுமிதா. வனிதாவுக்கு சொர்ணாக்கா தங்கச்சி பீர்க்கங்கா என்று பெயர் வைத்தார்.

லெக்பீஸ் ஷெரின்
ஃபாத்திமா பாபுவுக்கு அபிநய சரஸ்வதி என்று பட்டப்பெயர் வைத்தார். குட்டி ஷார்ட்ஸில் படு கவர்ச்சியாக உட்காந்திருந்த நடிகை ஷெரினுக்கு லெக்பீஸ் என பெயர் வைத்தார் மதுமிதா.

வேஸ்ட் பீஸ்
இதேபோல் அபிராமிக்கு ஃபிரைட் ரைஸ் என்றும், சாக்ஷி அகர்வாலுக்கு தயிர் சாதம் என்றும் பட்டைப்பெயர் வைத்தார். கவினுக்கு வேஸ்ட் பீஸ் என்று பெயர் வைத்தார் மதுமிதா.

அரைவேக்காடு, திருட்டுப்பையன்
சென்னை தமிழில் கலக்கி வரும் சாண்டிக்கு டுமீல் சேகர் என்றும் ரேஷ்மாவுக்கு புரூம் ஸ்டிக் மண்டை என்றும் பட்டைப் பெயர் வைத்தார் மதுமிதா. இதேபோல் முகெனுக்கு அரைவேக்காடு என்றும் தர்ஷனுக்கு திருட்டுப்பையன் என்றும் மதுமிதா பெயர் வைத்தார்.

தத்துவ விஞ்ஞானி
நடிகர் சரவணனுக்கு செவ்வாழை என்று பட்டம் கொடுத்தார் மதுமிதா. இதேபோல் இயக்குநர் சேரனுக்கு தத்துவ விஞ்ஞானி என்ற பட்டத்தை கொடுத்தார் மதுமிதா. லாஸ்லியாவுக்கு ரியாக்ஷன்லயே செம என சைகை செய்தார் மதுமிதா.


Click it and Unblock the Notifications











