இது கலவர பூமியாச்சே.. இங்க ஏன் வந்தீங்க.. டிவிட்டருக்கு வந்த பிரபல நடிகையை பயமுறுத்திய நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ஜாங்கிரி மதுமிதா டிவிட்டரில் புதிதாக கணக்கை தொடங்கியிருக்கிறார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஜாங்கிரி என பிரபலமானவர் நடிகை மதுமிதா. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா, மிரட்டல், அட்டக்கத்தி, டிமான்டி காலனி, கஜினிகாந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

புலி படத்தில் விஜயுடனும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாகவும் நடித்துள்ளார் ஜாங்கிரி மதுமிதா. சினிமா மட்டுமின்றி சீரியல்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார் மதுமிதா.

ஹவுஸ்மேட்ஸ் கோபம்

ஹவுஸ்மேட்ஸ் கோபம்

அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா, காவிரி பிரச்சனை குறித்து பேசியதால் சக ஹவுஸ்மேட்ஸ்களின் கோபத்திற்கு ஆளானார்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

சக ஹவுஸ்மேட்ஸ் கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்ற அவர் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதுவரை டிவிட்டரில் கணக்கு இல்லாமல் இருந்தார் மதுமிதா.

நேற்று முதல் டிவிட்டரில்

நேற்று முதல் டிவிட்டரில்

மதுமிதாவின் கணவரான மோசஸ் மட்டுமே டிவிட்டரில் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முதல் டிவிட்டரில் அடியெடுத்து வைத்துள்ளார் மதுமிதா.

நல்லதையே நினைப்போம்

நல்லதையே நினைப்போம்

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள மதுமிதா, முதல் முறையாக தற்போது டிவிட்டருக்கு வந்திருப்பதாகவும் நல்லதையே பேசுவோம் நல்லதையே நினைப்போம் என்றும் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

நலம் விசாரிப்பு

மதுமிதாவின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை டிவிட்டருக்கு வரவேற்றுள்ளனர். பலரும் பிக்பாஸில் நடந்த அந்த சம்பவத்துக்கு பிறகு நலமாகிவிட்டீர்களா என நலம் விசாரித்து வருகின்றனர்.

மகிழ்ச்சி

திறந்த இதயத்துடன் ட்விட்டருக்கு உங்களை வரவேற்கிறோம். உங்களை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி. வாழ்க, வளமுடன் என்கிறார் இந்த நெட்டிசன்.

மனிதத்தை போற்றுவோம்

நல்லது மது!
தங்களின் வருகையால் மகிழ்ச்சி!
நல்லதையே செய்வோம்!
மனிதத்தை போற்றுவோம்! என்கிறார் இந்த ரசிகர்.

இது கலவர பூமி

டிவிட்டர ஓபன் பண்ணா நிம்மதியே இருக்காது.. ஏன்னா இது கலவர பூமி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

தர்பார் ஸ்டைல் டயலாக்

டிவிட்டர் வர்றது சிறப்பு.. கருத்த லெஃப்ட்ல வச்சுக்குங்க.. கவிதைய ரைட்ல வச்சுக்குங்க.. அரசியல் டிவிட்ட மட்டும் ஸ்ட்ரைட்டா வச்சுக்காதீங்க என்று தர்பார் ஸ்டைலில் கூறுகிறார் இந்த நெட்டிசன்.

வெளியேற வழியில்லை

கிணத்துல ஒரு தடவை ஏறங்கியாச்சா.....வெளியேர வழி இல்லை.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கலவர பூமியாச்சே

இது கலவர பூமியாச்சே... பிறகு ஏன் வந்தோம் ன்னு யோசிக்க வேண்டி வரும்.. என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X