லாக்டவுன் நேரத்தில் நடிகை மதுமிதா கற்றுக்கொண்ட விஷயங்கள்.. தீயாய் பரவும் கலக்கல் போட்டோஸ்!
சென்னை: நடிகை மதுமிதா லாக்டவுன் நேரத்தில் தான் கற்றுக்கொண்ட இரண்டு விஷயங்களை கலக்கல் போட்டோக்களுடன் ஷேர் செய்துள்ளார்.
நடிகை மதுமிதா தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகையாக வலம் வருகிறார். ஜாங்கிரி மதுமிதா என்றும் அழைக்கப்படுகிறார்.
ஒரு கல் ஒரு கண்ணாடி, டிமாண்டி காலணி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, காஞ்சனா 2, விஸ்வாசம், காஷ்மோரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்கொலை முயற்சி
கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் காவிரி பிரச்சனை குறித்து பேசியதால் சக ஹவுஸ் மேட்டுகளால் கார்னர் செய்யப்பட்டு தற்கொலைக்கு முயன்றார்.

விஜய் டிவி புகார்
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிகளை மீறியதாக கூறி நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டார். பின்னர் விஜய் டிவி நிர்வாகம் மதுமிதா மீது போலீஸில் புகார் அளித்தது. இதனால் மதுமிதாவும் விஜய் டிவி மீது போலீஸில் புகார் அளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போட்டோக்கள் கார்
அதாவது, இந்த லாக்டவுன் நேரத்தில் இருசக்கர வாகனம் ஓட்டவும், கார் ஓட்டவும் கற்றுக்கொண்டுள்ளார் மதுமிதா. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோக்களுடன் தெரிவித்துள்ளார்.

கெட்ட பழக்கம்
அதில் படப்பிடிப்பு இல்லாத, குறைந்த நாட்களில் பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டேன்.
எப்போதும் யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன். மற்றொரு ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கிறேன்.
வீடியோ நாளை வெளியாகும்.. என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











