twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆரியுடன் போட்டோ எடுத்த மதுமிதா.. ரசிகர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

    |

    சென்னை: பிக்பாஸ் சீசன் 4 வின்னரான ஆரியுடன் எடுத்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மதுமிதா.

    ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகையாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார்.

    வெள்ளை உடையில்.. கொள்ளை அழகை.. அப்படியே காட்டி மிரள வைத்த பவித்ரா வெள்ளை உடையில்.. கொள்ளை அழகை.. அப்படியே காட்டி மிரள வைத்த பவித்ரா

    மதுமிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    பிக்பாஸிலிருந்து வெளியேற்றம்

    பிக்பாஸிலிருந்து வெளியேற்றம்

    இதில் சக ஹவுஸ்மேட்ஸ் கார்னர் செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா கத்தியால் கையை கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் பிக்பாஸ் விதிகளை மீறியதாக கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மதுமிதா.

    ஃபைனல்ஸ் செல்வார்..

    ஃபைனல்ஸ் செல்வார்..

    பிக்பாஸ் வீட்டில் இருந்த வரை மதுமிதா நேர்மையாக விளையாடினார். டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்தார். இதனால் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடையிலேயே வெளியேற்றப்பட்டார் மது.

    கலைமாமணி விருது

    கலைமாமணி விருது

    தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் மதுமிதாவுக்கு தமிழக அரசு அண்மையில் கலைமாமணி விருது வழங்கியது. இந்நிலையில் நடிகை மதுமிதா பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னரான ஆரியை நேரில் சந்தித்துள்ளார்.

    மக்கள் இதயங்களை வென்றவர்

    மக்கள் இதயங்களை வென்றவர்


    ஆரியுடன் எடுத்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள மதுமிதா மக்கள் இதயங்களை வென்றவரை ஃபங்ஷன் ஒன்றில் சந்தித்தேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

    மறுபடி வெல்லும்

    மறுபடி வெல்லும்

    மதுமிதாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் இருவருமே மக்கள் மனதை வென்றவர்கள் மது நேர்மை தோற்காது மனதின் சாட்சிப்படி வாழ்பவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் தர்மம் மறுபடி வெல்லும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

    English summary
    Actress Madhumitha meets Biggboss tittle winner Aari in a function. Madhumitha shared those photos on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X