வீட்ல சுத்திப் போட சொல்லுங்க... நடிகை மதுமிதாவின் அசத்தல் போட்டோவை பார்த்து அட்டைஸ் பண்ணும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை மதுமிதாவின் அசத்தலான போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சுத்திப்போடுங்கள் என அட்வைஸ் செய்துள்ளனர்.

Recommended Video

Bigg Boss Losliya:உடற்பயிற்சி செய்யும் லொஸ்லியா

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை மற்றும் துணை நடிகைகளில் ஒருவர் மதுமிதா. சந்தானம், சூரி என பலருடம் ஜோடியாக நடித்துள்ளார்.

அதேபோல் முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் மதுமிதா.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நியூட்ரலாக நடந்து கொண்டதோடு டாஸ்க்களையும் அட்டகாசமாக செய்து ரசிர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் ஒன்றாக சேர்ந்து கொண்டு கார்னர் செய்த போதும் அசால்ட்டாக எதிர் கொண்டார்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

காவிரி விவகாரம் குறித்து பேசியதற்காக மொத்த சேரன், கஸ்தூரி ஆகியவர்களை தவிர்த்து ஒட்டு மொத்த பிக்பாஸ் ஹவுஸும் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தது. இதனால் நொந்து போன மதமிதா, கத்தியால் கையை அறுத்துக் கொண்டு தற்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

கார் ஓட்டக் கற்றார்

கார் ஓட்டக் கற்றார்

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கினார் மதுமிதா. தொடர்ந்து தன்னுடைய போட்டோக்கள் வீடியோக்கள் என ஷேர் செய்து வருகிறார். அண்மையில் இந்த லாக்டவுன் நேரத்தில் டூ வீலர் மற்றும் கார் ஓட்டக் கற்றுக்கொண்டதாக கூறிய மதுமிதா அது தொடர்பான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டார்.

குடும்ப குத்து விளக்கு

குடும்ப குத்து விளக்கு

அதனை பார்த்த ரசிகர்கள் மதுமிதாவை பாராட்டியதோடு வாழ்த்தும் கூறினர். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகை மதுமிதா ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் குடும்ப குத்துவிளக்கு என்று கூறி வாயை பிளந்துள்ளனர்.

கொள்ளை அழகு

கொள்ளை அழகு

அந்த போட்டோவில் மஞ்சள் நிற சேலையில் கறுப்பு நிற ஜாக்கெட் அணிந்து அசத்தலாக உள்ளார் மதுமிதா. மேலும் இடுப்பில் ஒட்டியானம், கையில் வளையல், காதில் ஜிமிக்கி என எதுவும் அதிகமாக இல்லாமல் அளவோடு கொள்ளை அழகில் கிறங்க வைத்துள்ளார்.

சுத்திப்போட சொல்லுங்க

சுத்திப்போட சொல்லுங்க

அந்த போட்டோவுக்கு மங்கையராகப் பிறப்பதற்கே-
நல்ல மாதவம் செய்திட வேண்டும்; என கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், திருஷ்டி விழுந்துவிடும் வீட்டில் சுத்தி போட சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர். சிலர் ரொம்ப அழகா இருக்கீங்க மதுமிதா என்றும் பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X