பிறர் நம்பிக்கையை இகழவும், பழிக்கவும் எந்த கூமுட்டை கூட்டத்திற்கும் அனுமதியில்லை.. மதுமிதா காட்டம்!
சென்னை: பிறர் நம்பிக்கையை இகழவும் பழிக்கவும் எந்த கூமுட்டை கூட்டத்திற்கும் அனுமதியில்லை என நடிகை மதுமிதா காட்டமாக கூறியிருக்கிறார்.
இந்துக் கடவுள்கள் மற்றும் கந்த சஷ்டிக் கவசத்தை இழிவு படுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் வீடியோ வெளியிட்டனர்.
இந்த வீடியோவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. பாஜக சார்பில் நேற்று கந்த சஷ்டி கவசம் பாடி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கதை செய்ய வேண்டும்
இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த வீடியோவை வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

சரணடைந்த சுரேந்திரன்
இதுதொடர்பாக செந்தில் வாசன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த வீடியோவை வெளியிட்ட சுரேந்திரன் என்பவர் நேற்று புதுச்சேரி போலீஸில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video

நடிகை மதுமிதா
கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலுக்கு திரைத்துறை பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனம் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான மதுமிதா கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலை கடுமையாக சாடி டிவிட்டியுள்ளார்.

சீண்ட வேண்டாம்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் மதம் மனிதனைப் பண்படுத்தும் ஒரு கருவி. அது பக்தியாளர்களுக்கு மேன்மையான நம்பிக்கை. பிறர் நம்பிக்கையை இகழவும், பழிக்கவும் எந்தக் கூமுட்டை கூட்டத்திற்கும் அனுமதியில்லை. இனியும் சீண்டவேண்டாம் சீர்திருத்த வாதிகளே... என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











