சிறிய பட்ஜெட் படங்களை காப்பாற்ற சங்கங்கள் போராட வேண்டும் - நடிகை மதுமிதா

சென்னை : நடிகை மதுமிதாவை நமக்கெல்லாம் ஜாங்கிரி மதுமிதாவாகவே தெரியும். இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் . இவரை பலரிடம் கொண்டு போய் சேர்த்த படம் ஒரு கல் ஒரு கண்ணாடி அதனாலே அந்த படத்தில் சந்தானம் பேசும் ஒரு வசனம் மூலம் இவருக்கு ஜாங்கிரி மதுமிதா எனும் அடைமொழி பெயர் வந்தது.

நேற்று நடந்த ஞான செருக்கு எனும் பட்ஜெட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜாங்கிரி மதுமிதா, சிறிய பட்ஜெட் படங்கள் வருடத்திற்கு தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகுகிறது. இருந்தும் எந்த படமும் பெரிய பட்ஜெட் படங்களின் அளவில் வியாபார ரீதியாக வெற்றி பெறுவதில்லை என்று வருத்தம் தெரிவித்தார் .

actress madhumitha supports small budget films

மேலும் நமக்கு இதை பற்றிய பொறுப்பு வேண்டும் என்று கூறினார் .கடந்த வருடத்தில் வெளியான நெடுநல்வாடை, ஒத்த செருப்பு மற்றும் சில்லுகருபட்டி போன்ற படங்கள் சிறிய பட்ஜெட்டாக இருந்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது . இருந்தும் வியாபார ரீதியாக அவை பெரிய சாதனைகளை செய்யவில்லை என்பது வருத்தம் என கூறினார் .

actress madhumitha supports small budget films

மேலும் தமிழக அரசு, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து இந்த பிரச்சனைக்காக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார் .இந்த மாதிரி சிறு பட்ஜெட் படங்களை நாமும் வரவேற்க வேண்டும் என்று பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார் மதுமிதா.

actress madhumitha supports small budget films

மதுமிதா பிக்பாஸ்க்கு பிறகு கலந்து கொள்ளும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இதுவாகும் .பிக்பாஸில் மதுமிதாவுக்கு பல பிரச்சனைகள் நடந்தேறியதாக வீட்டை விட்டு தன் கையை தானே அறுத்து பாதியில் வந்ததாக பலரும் பல விதத்தில் பேசி பல குழப்பங்கள் ஏற்பட்டு பல தடவை மதுமிதா மைக் பிடித்து மீடியாவிடம் பேசி இப்பொழுது தான் ஒரு வழியாக அந்த பிக் பாஸ் அலை ஓய்ந்து உள்ளது .
அதே நேரத்தில் பிக்பாஸ் சென்றதால் மதுமிதாவின் பெயரும் கெட்டுவிட்டது என பலரும் கருத்து தெரிவித்தனர் . எது எப்படியோ மது சினிமாவில் மீண்டும் பட்டய கெளப்ப வேண்டும் என்பது தான் அனைவரது ஆசையும்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X