Madonna: எனக்கு புதிய பேர் கிடைச்சிருக்கு.. உற்சாகத்தில் மடோனா வெளியிட்ட லியோ புகைப்படங்கள்!
சென்னை: நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடித்துள்ள லியோ படம் சர்வதேச அளவில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் 14 வருடங்களுக்கு பிறகு த்ரிஷா இணைந்துள்ள நிலையில், அவர்களுடைய கெமிஸ்ட்ரி மீண்டும் வொர்க்அவுட் ஆகியுள்ளது.

இந்தப் படத்தின் கலெக்ஷன் கடந்த 10 நாட்களில் சர்வதேச அளவில் 475 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இந்தப் படம் 1000 கோடி ரூபாய்களை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வட இந்தியாவில் இந்தப் படம் நினைத்தபடி வெளியாகாத நிலையில் இது சாத்தியமில்லை என்று படத்தின் ரிலீசையொட்டி தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்திருந்தார்.

500 கோடிகளை நெருங்கும் லியோ பட வசூல்: இதற்கேற்ப கடந்த 10 நாட்களில் லியோ படத்தின் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் வசூல் 475 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளது. தற்போது இந்தப் படம் இரண்டாவது வாரயிறுதியில் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிகமான இடத்தை கொடுத்ததே படம் பேமிலி ஆடியன்சை அதிகமாக கவராமல் போனதற்கு காரணமாக கூறப்படுகிறது.
ரசிகர்களை கவராத 2வது பாதி: மேலும் முதல் பாதியை காட்டிலும் இரண்டாவது பாதி ரசிகர்களை அதிகமாக கவர தவறிவிட்டது. தனது சமீபத்திய பேட்டியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதை ஒப்பு கொண்டுள்ளார். படத்தில் விஜய்யுடன் மிஷ்கின், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில், அனைவருக்கும் சமமான கேரக்டர்களை வழக்கம்போல லோகேஷ் கனகராஜ் கொடுத்திருந்தார். அவர்களும் அதை சிறப்பாக செய்திருந்தனர்.

நடிகை மடோனா செபாஸ்டியன்: படத்தில் விஜய்யின் தங்கையாக பிளாஷ்பேக் காட்சிகளில் நடிகை மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். படத்தில் எலிசா என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்த நிலையில், அவரது உடன்பிறந்த இரட்டை குழந்தையாக மடோனா தோன்றியிருந்தார். படத்தில் விஜய்யுடன் இணைந்து இவர் நடித்திருந்த காட்சிகள் குறைவாக இருந்த போதிலும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. நான் ரெடி பாடலில் விஜய்யுடன் மாஸாக நடனமாடியிருந்தார்.

சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்: இவருக்கும் விஜய்க்கும் இடையிலான காம்பினேஷன் காட்சிகள் அதிகமாக இருந்ததாகவும் படத்தின் நீளம் கருதி அவை குறைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே படத்தின் படப்பிடிப்பு காட்சிகளின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் மடோனா வெளியிட்டுள்ளார். மேலும் தன்னை தன்னுடைய ரசிகர்கள் எலிசா என்றே அழைத்து லியோ படத்திற்கான வாழ்த்துக்களை பகிர்ந்து வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











