வெட்கி தலைகுனிந்த மேகா ஆகாஷ்.. சொக்கி நிலை குலைந்த ரசிகர்கள்.. அட்டகாசம்!
சென்னை : தனுஷூடன் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களில் கதாநாயகியாகவும் ரஜினியுடன் பேட்டை படத்தில் நடித்தவர் மேகா ஆகாஷ்
இவர் தற்போது பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கானுடன் ராதே என்ற இந்தி திரைப்படத்திலும், தமிழிலில் அசோக் செல்வனுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் கறுப்பு வெள்ளையில் அழகான போட்டோஷூட் எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த படம் இதயத்தை அள்ளி வருகிறது.

ஒரு பக்கக்கதை
லை என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார் மேகா ஆகாஷ். இவர் தமிழில் முதலில் நடிக்கத் தொடங்கியது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியான ஒரு பக்கக் கதை இப்படத்தில் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் இவருக்கு பெயர் சொல்லும்படியாக அமையவில்லை.

ஹிட் பாடல்கள்
இதையடுத்து கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் உருவான என்னை நோக்கி பாயும் தோட்டாவில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தார். இந்தப்படம் சரியாக ஓடவில்லை என்றால் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. மறுவார்த்தை பேசாதே, விசிறி பாடலை ரசிகர்கள் இன்றுவரை ரிப்பீட் மோடில் கேட்டு வருகின்றனர்.இதையடுத்து கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் உருவான என்னை நோக்கி பாயும் தோட்டாவில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தார். இந்தப்படம் சரியாக ஓடவில்லை என்றால் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. மறுவார்த்தை பேசாதே, விசிறி பாடலை ரசிகர்கள் இன்றுவரை ரிப்பீட் மோடில் கேட்டு வருகின்றனர்.

ரஜினியுடன் பேட்டயில்
அந்த படத்திற்கு பிறகு கண்ணன் இயக்கத்தில் அதர்வாவுடன் பூமராங் என்ற படத்தில் நடித்தார். பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட படத்திலும், பவன் கல்யாணுடன் அந்தாரின்டிகி தாரேதி என்ற தெலுங்கு படத்திலும், சல்மான் கானுடன் ராதே படத்திலும் கமிட்டானார் மேகாஆகாஷ்.

கறுப்பு வெள்ளை படம்
கொரோனா காலத்தில் பல நடிகர் நடிகைகள் தங்கள் ரசிகர்களை தங்கவைத்துக்கொள்ள போட்டோஷூட் நடத்தி அதை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு இருந்தனர். ஆனால் நிலைமை சரியான பின்பும், தினம் தினம் புகைப்படத்தை பதிவிடுவதை பலர் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை மேகா ஆகாஷ் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் புடவையில் நேர்வாகு எடுத்து அம்சமாக உள்ளார் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











