Ravindar -Mahalakshmi: ரவீந்தர் பிறந்தநாள்.. மகாலட்சுமி செஞ்ச வேலையை பாருங்க!

சென்னை: தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் அவரது மனைவியும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமி இருவரும் எப்போதும் ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர்.

தங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு சிறப்பான தருணங்களையும் இவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகின்றனர்.

ஃபேட் மேன் என்று அழைக்கப்படும் ரவீந்தர் -மகாலட்சுமி திருமணம் பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்திய நிலையில், அவை அனைத்தையும் ஒருசேர எதிர்கொண்டனர்.

Actress Mahalakshmi gifts to Ravindar for his Birthday

கணவனின் பிறந்தநாளுக்கு சிறப்பான பரிசளித்த மகாலட்சுமி: தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த ஆண்டில் கோயிலில் எளிமையாக தங்களது திருமணத்தை செய்துக் கொண்டனர். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால், ஆடம்பரமாக செய்யக்கூடாது என்பதில் தெளிவாக முடிவெடுத்து, இவர்கள் தங்களது திருமணத்தை முடித்த நிலையில், சமூக வலைதளம் மூலம் தன்னுடைய திருமணத்தை அறிவித்தார் ரவீந்தர்.

உடனடியாக பற்றிக் கொண்டது தீ. இவர்கள் இருவரின் திருமணம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ஃபேட்மேன் என்று அழைக்கப்படும் ரவீந்தரை பணத்திற்காகத்தான் மகாலட்சுமி திருமணம் செய்துக் கொண்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இவை அனைத்தையும் மறுத்து அடுத்தடுத்த பேட்டிகளை இருவரும் கொடுத்து வந்தனர். தொடர்ந்து தங்களது அன்னியோன்னியத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த போஸ்ட்களை வெளியிட்டனர்.

Actress Mahalakshmi gifts to Ravindar for his Birthday

தற்போது இவர்களது திருமண சர்ச்சைகள் ஓய்ந்துள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அவ்வப்போது, கோயில்கள் போன்றவற்றிற்கு இருவரும் செல்லும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்க முடிகிறது. இந்நிலையில் தற்போது ரவீந்தர் பிறந்தநாளையொட்டி அவருக்கு மகாலட்சுமி ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதன் வீடியோவையும் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரவீந்தரின் ஆளுயரத்திற்கு புகைப்பட பிரேமை ரெடி செய்து அதை அவரது பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார். இந்த பிரேம் ஏறக்குறைய 6 அடி உயரம் கொண்டதாக காணப்படுகிறது. மேலும் தன்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த ரவீந்தருக்கும் இந்த நாளில் மகாலட்சுமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் எப்போதும் சிறப்பாக செயல்படும் ரவீந்தரை தான் எப்போதும் காதலிப்பதாகவும் மகாலட்சுமி கூறியுள்ளார்.

மகாலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேக் செய்யப்பட்ட அந்த பிரேமை பிரிப்பதாகவும் பின்பு அந்த புகைப்படத்துடன் இருவரும் இணைந்து போஸ் கொடுப்பதாகவும் காணப்படுகிறது. தான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் புகைப்படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாகவும் மகாலட்சுமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சன் டிவியின் மகராசி சீரியலில் சிறப்பான கேரக்டரில் நடித்துவந்தார் மகாலட்சுமி. இந்த சீரியல் தற்போது நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து சீரியல் டீமுடன் புகைப்படங்களை வெளியிட்டு சன் டிவிக்கு நன்றி தெரிவித்திருந்தார் மகாலட்சுமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X