நடிப்புக்கு முழுக்குப் போடும் நடிகை மகாலட்சுமி.. ரவீந்தர்தான் வற்புறுத்தினாரா?

சென்னை : தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது முதல் இவர்கள் இருவரும் தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே உள்ளனர்.

இவர்கள் போடும் பதிவுகள், பேட்டிகள் என அனைத்துமே ரசிகர்களின் விருப்பத்திற்குரியவையாக உள்ளன.

ரவீந்தர் -மகாலட்சுமி திருமணம்

ரவீந்தர் -மகாலட்சுமி திருமணம்

லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் கடந்த செப்டம்பர் 1ம் தேதி பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டார். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் இந்தத் திருமணம் நடைபெற்றது.

ட்ரெண்டிங்கில் தம்பதி

ட்ரெண்டிங்கில் தம்பதி

இந்தத் திருமணத்தை இரண்டு புகைப்படங்களுடன் சமூக வலைதளத்தில் அறிவித்தாலும் அறிவித்தார். அப்போதிலிருந்து இருவரும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளனர். பணத்திற்காகத்தான் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்தாரா என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எதிர்கொண்டார் மகாலட்சுமி.

சீரியல் குறித்து ரவீந்தர் கடுப்பு

சீரியல் குறித்து ரவீந்தர் கடுப்பு

அதிகமான பேட்டிகள், விமர்சனங்களை இருவரும் சந்தித்தனர். அனைத்திற்கும் சளைக்காமல் பதிலளித்தனர். தொடர்ந்து மகாலட்சுமி தன்னுடைய அன்பே வா சீரியலில் பிசியான நிலையிலும் மீடியா இவர்களை விட்டு வைக்கவில்லை. முன்னதாக மகாலட்சுமியில் சீரியலை மட்டும் தான் பார்த்திருந்தால் அவரை விவாகரத்து செய்திருப்பேன் என்றும் ரவீந்தர் தெரிவித்திருந்தார்.

விடியும் வரை காத்திரு படம்

விடியும் வரை காத்திரு படம்

மேலும் தினந்தோறும் இரவில் தன்னுடைய சீரியலை பார்க்க மகாலட்சுமி வற்புறுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கூடியவிரைவில் மகாலட்சுமி சீரியலில் இருந்த விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ரவீந்தர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு படத்தில் மகாலட்சுமி நடித்து வருகிறார்.

சீரியலுக்கு முழுக்குப் போடும் மகாலட்சுமி

சீரியலுக்கு முழுக்குப் போடும் மகாலட்சுமி

ரவீந்தர் படத்தயாரிப்பு பணிகளை கவனித்துவரும் நிலையில், சீரியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு மகாலட்சுமி, சீரியல் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாலட்சுமியின் சீரியலை பார்க்க விரும்பாத ரவீந்தர்தான் இந்த ஐடியாவை கொடுத்தாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வந்தாள் மகாலட்சுமியே நிகழ்ச்சி

வந்தாள் மகாலட்சுமியே நிகழ்ச்சி

இவர்கள் இருவரும் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்த உறுதித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே வரும் ஆயுதபூஜை ஸ்பெஷலாக இவர்கள் இருவரும் பங்கேற்கும் வந்தாள் மகாலட்சுமியே என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X