வசமா சிக்கிய தயாரிப்பாளர் ரவீந்திரன்.. மனைவியை பார்க்க வந்த போது ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!
சென்னை: மோசடி புகாரில் சிக்கி உள்ள தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது மனைவியை பார்க்க வந்த போது போலீசார் ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளனர்.
தயாரிப்பாளர் ரவீந்திரன் லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து சோஷியல் மீடியாவில் பிரபலமானார்.

திடீர் திருமணம்: தயாரிப்பாளர் ரவீந்திரன் கடந்த செப்டம்பர் 1ந் தேதி நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டு ஷாக் கொடுத்தார். கடந்த ஆண்டு இந்த நேரம் எந்த பக்கம் திரும்பினாலும் இவர்களின் காதல் கதை தான் ஓடிக்கொண்டு இருந்தது. இருவரும் வெற்றிகரமாக தங்களது முதல் திருமண நாளை கொண்டாடிய நிலையில் மோடி புகார் ஒன்றில் தயாரிப்பாளர் ரவீந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரவீந்திரன் மீது புகார்: சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
ஏமாற்றியது உண்மை: தொழிலதிபர் பாலாஜி புகார் குறித்து உரிய விசாரணை நடித்த சந்திப் ரத்தோர் உத்தரவிட்டார். விசாரணையின் ரவீந்தர் மற்றும் பாலாஜியிடம் விசாரணை நடத்திய போலீசார் இருவரிடமும் இருந்த ஆதாரங்களை சமர்பித்தனர். இந்த விசாரணையில் தொழிலதிபர் பாலாஜியிடம் இருந்து ரவீந்திரன் பணத்தை பெற்றது பணத்தை திருப்பி தராததும் தெரியவந்தது.
மாஸ்டர் பிளான்: இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது மனைவியான மகாலட்சுமியை பார்த்துவிட்டு அசோக் நகர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட போலீசார் அதிரடியாக அசோக் நகருக்கு வந்து அவரது அலுவலகத்தில் சோதனை செய்து, ரவீந்திரன் போஸ் போர்ட் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications











