பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு திருமணம்.. நீண்டநாள் காதலரை கரம் பிடித்தார்!
திருவனந்தபுரம்: தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார் நடிகை மகாலட்சுமி.
தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை மகாலட்சுமி. சிவகாமி தொடரில் நாயகியாக நடித்து அனைவரது மனதை கவர்ந்திருப்பவர் இவர். தெலுங்கில் வெளிவந்த அர்த்தனாரி திரைப்படத்தில் திருநங்கையாக நடித்து, பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

நடிகை மகாலட்சுமி நிர்மல் கிருஷ்ணா என்பவரை நீண்டகாலமாக காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் மகாலட்சுமி, நிர்மல் கிருஷ்ணாவின் திருமணம் திருவனந்தபுரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரபல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.
மணப்பெண் அலங்காரத்தில் மிகவும் பொலிவுடன் காணப்பட்ட மகாலட்சுமியை, நடிகைகள் பீனா ஆண்டனி, விந்துஜா மேனன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று வாழ்த்தினர். மகாலட்சுமி, நிர்மல் கிருஷ்ணா வீடியோ யூடியூபில் வெளியாகி டிரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











