“எனது கணவரை விட்டு விடு என நடிகை மகாலட்சுமியிடம் கெஞ்சினேன்”.. நடிகை ஜெயஸ்ரீ கண்ணீர் பேட்டி!

தனக்கும் தனது கணவர் ஈஸ்வருக்கும் பிரச்சினை ஏற்பட நடிகை மகாலட்சுமி தான் காரணம் என நடிகை ஜெயஸ்ரீ குற்றஞ்சாட்டியுள்ளார்.

Recommended Video

Jayasree Eswar blast on husband Eswar |Eswar Arrested

சென்னை: தனது கணவர் ஈஸ்வரை விட்டு விலகி விடும்படி நடிகை மகாலட்சுமியிடம் கெஞ்சியதாகவும், ஆனால் அவர் மனமிறங்கவில்லை என்றும் நடிகை ஜெயஸ்ரீ வேதனை தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை வட்டாரத்தில் பிரபலமானவர்கள் நடிகர் ஈஸ்வரும், அவரது மனைவி ஜெயஸ்ரீயும். சமீபகாலமாக நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் ஜெயஸ்ரீ, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈஸ்வர் மீது போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தப் புகாரில் அவர் ஈஸ்வரின் நடத்தை சரியில்லை எனத் தெரிவித்திருந்தது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெயஸ்ரீ பேட்டி

ஜெயஸ்ரீ பேட்டி

இந்நிலையில் ஈஸ்வர் தனக்கு செய்த கொடுமைகள் பற்றி இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் ஜெயஸ்ரீ. அதில் ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன்னை விவாகரத்து செய்ய, ஈஸ்வர் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

மகாலட்சுமி தான் காரணம்

மகாலட்சுமி தான் காரணம்

மகாலட்சுமியும் ஏற்கனவே திருமணமானவர் தான். அவரது குழந்தை ஈஸ்வரை அப்பா என்று அழைப்பதாக ஜெயஸ்ரீ அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தான் ஒருமுறை மகாலட்சுமியை காரில் சந்தித்து பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மகாலட்சுமியிடம் கெஞ்சினேன்

மகாலட்சுமியிடம் கெஞ்சினேன்

அப்போது தனது கணவரை விட்டுவிடும்படி காலில் விழாதக் குறையாக அழுது கெஞ்சியதாக கூறியுள்ள ஜெயஸ்ரீ, தனது இந்த நிலைக்கு மகாலட்சுமியும் ஒரு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார். மகாலட்சுமியுடன் தான் ஒன்றரை மணி நேரம் பேசியதை செல்போன் மூலம் ஒட்டுக்கேட்ட ஈஸ்வர், பின்னர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

ஈஸ்வரின் ஆசை

ஈஸ்வரின் ஆசை

மேலும் ஈஸ்வரை தான் பெரிதும் நம்பியதாகவும், ஆனால் அவர் முன்பிருந்தே பெண்கள் விஷயத்தில் தவறானவர் என்பது தெரியவந்திருப்பதாகவும் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். மகாலட்சுமி ஈஸ்வரிடம் நட்பாக பழகுவதாகவே கூறி வருவதாகவும், ஆனால் அவரை திருமணம் செய்ய ஈஸ்வர் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: jayashree ஜெயஸ்ரீ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X