Don't Miss!
- News
ஞானவாபி மசூதி விவகாரம்.. நீதிமன்றம் சென்ற முஸ்லீம் அமைப்பினர்! இன்று வாரணாசி கோர்டில் விசாரணை
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Finance
இன்று தங்கம் விலை எப்படியிருக்கு.. கூடிருக்கா.. குறைஞ்சிருக்கா..!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நானொரு ரெயின்போ லாலிபாப்.. பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் போட்டோஸ்!
சென்னை : நடிகர் சமுத்திரக்கனி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார்.
அருண் விஜய்க்கு திருப்புமுனையை ஏற்படுத்திய குற்றம் 23, கொடிவீரன், மாகாமுனி, அசுரகுரு என தொடர் வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இப்பொழுது மலையாளத்தில் கவனம் செலுத்திவரும் மஹிமா ரெயின்போ கலரில் லாலிபாப் டிரஸ்ஸில் செம க்யூட்டா இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தவிக்கவிட்டுள்ளார்.

கௌரவத் தோற்றத்தில்
குறைந்த அளவு திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் மலையாளத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள நடிகை மஹிமா நம்பியாரின் க்யூட்டான நடிப்பிற்கு தமிழ் ரசிகர்கள் பலரும் அடிமையாகி உள்ளனர். மலையாளத்தில் வெளியான காரியஸ்தன் படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து சமுத்திரக்கனி கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்த சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

நல்ல கதையம்சத்தை
இதுவரை பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய்யுடன் இணைந்து நடித்த குற்றம் 23 இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதோடு நல்ல கதையம்சத்தை கொண்டதால் படவாய்ப்புகள் குவியத் தொடங்கின. மஹிமா மற்றும் அருண் விஜய் என இருவருக்குமே மிகப்பெரிய திருப்புமுனையை இந்த படம் ஏற்படுத்தியிருக்க அதைத்தொடர்ந்து நடித்த புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி மற்றும் சமீபத்தில் வெளியான அசுர குரு ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

மலையாள படங்களில்
குறிப்பாக மகாமுனியில் சமூகப் போராளி பெண்ணாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்ற இவர் இப்பொழுது மலையாள படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது வெளியிடும் இவரின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை வைரலாக்கி வருகிறது.

முயல் குட்டி ஹேர் ஸ்டைலில்
அந்த வகையில் இப்பொழுது கலர் கலரான ரெயின்போ பேண்ட் அணிந்து கொண்டு க்யூட்டான முயல் குட்டி போல அழகான ஹேர் ஸ்டைலில் உள்ள புகைப்படங்களை பதிவிட்டதோடு நான் ஒரு ரெயின்போ லாலிபாப் என கேப்ஷன் போட்டிருக்கும் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.