முதல் கணவர் தற்கொலை.. 2வது திருமணத்திற்கு ஒகே சொன்ன பிரபல நடிகை.. காதலரின் போட்டோவை வெளியிட்டார்!
தனது காதலர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சீரியல் நடிகை மைனா நந்தினி.
Recommended Video
சென்னை: சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் நடிகை மைனா நந்தினி கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நந்தினி. அந்த சீரியலில் அவரது கதாபாத்திரப் பெயரான மைனா என்பது மக்களின் மனதில் பதிந்து போனதால், 'மைனா' நந்தினி ஆனார்.
சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் சில படங்களில் அவர் நடித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

முதல் திருமணம்:
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் மைனா. ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்தனர். கார்த்திக்கேயன் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும், சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் என பிஸியானார் நந்தினி.

மீண்உம் காதல்:
இந்நிலையில், தற்போது இவர் சீரியல் நடிகர் ஒருவரை காதலிப்பதாக ஒரு பேட்டியில் அறிவித்துள்ளார். அவரது காதலர் பெயர் யோகேஷ் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு முதலே யோகேஷை மைனாவிற்கு தெரியுமாம். கடந்த ஒரு வருடமாகத் தான் நெருங்கிய நண்பர்களாக மாறினார்களாம்.

திருமண தேதி:
கடந்த ஜனவரி மாதம் யோகேஷின் பெற்றோர், மைனாவைப் பெண் கேட்டு சென்றுள்ளனர். முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் தன்னை நன்கு புரிந்து கொண்ட நண்பரே, கணவராக வருவதால் மைனாவும் இத்திருமணத்திற்கு ஓகே சொல்லி விட்டாராம். கூடிய சீக்கிரமே கல்யாண தேதியை அறிவிக்க இருப்பதாக கூறியிருக்கிறார் மைனா.

சன் டிவி நடிகர்:
தொடர்ந்து, அந்த சீரியல் நடிகரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவர். அதில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். யோகேஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











