Jyothika: 90'ஸ் ரீ யூனியனுக்கு ஜோதிகா வராததற்கு காரணம் என்ன தெரியுமா? பளிச்சுனு சொன்ன மாளவிகா!

சென்னை: கடந்த சில தினங்களாகவே இணையத்தில் 90'ஸ் கதாநாயகிகள், கதாநாயகர்கள், இயக்குநர்களின் ரீயூனியன் புகைப்படங்களும் அங்கு அவர்கள் செம ஜாலியாக பொழுதைக் கழித்த வீடியோக்களும் பரவி வந்தன. இப்படி இருக்கும்போது பல ரசிகர்கள் கேட்ட கேள்வி, ஏன் இந்த ரீ யூனியனில் நடிகை ஜோதிகா கலந்து கொள்ளவில்லை. சிம்ரன் வந்ததாலா என்று கூட பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் ஜோதிகா மட்டும் இல்லாமல் மற்றவர்கள் ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் நடிகை மாளாவிகா.

நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தாலே தனது சினிமா நண்பர்களுடன் செம ஜாலியாக நேரத்தைக் கழித்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள்தான். குறிப்பாக தனது சம கால நடிகைகளுடன் அவர் செம க்யூட்டாக ரீல்ஸ் எல்லாம் பதிவிட்டிருந்தார். இந்த ரீ யூனியனில் ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், லிங்குசாமி போன்ற பல இயக்குநர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Actress Malavika Explains Why Other Celebrites are Not Attends 90 s Reunion Includes Jyothika
Photo Credit:

அவர் பகிர்ந்த புகைப்படங்களில் நடிகைகள் சிம்ரன், மாளவிகா, சங்கீதா, சங்கவி, மகேஸ்வரி உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொண்டிருந்தனர். அதேபோல் இயக்குநர்கள் ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், மோகன் ராஜா, நடிகர் ஜக்கு பாய், நடன இயக்குநர் மற்றும் நடிகர் பிரபுதேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

ஜோதிகா: இந்நிலையில் இந்த ரீ யூனியனில் ஏன் குறிப்பிட்ட சிலர் மட்டும் கலந்து கொண்டுள்ளார்கள். மற்றவர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. குறிப்பாக ஜோதிகா ஏன் கலந்து கொள்ளவில்லை, சிம்ரன் வந்ததால், ஜோதிகா வரவில்லையா என கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்த கேள்விக்கு ரீ யூனியனில் கலந்து கொண்ட நடிகை மாளவிகா பதில் அளித்துள்ளார்.

Actress Malavika Explains Why Other Celebrites are Not Attends 90 s Reunion Includes Jyothika
Photo Credit:

மாளவிகா விளக்கம்: அதாவது, " எனது சினிமா நண்பர்கள் அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி. இந்த ரீ யூனியனை நல்லவேளை நான் மிஸ் செய்யவில்லை. சிரித்து சிரித்து எனக்கு வாய் வலியே ஏற்பட்டுவிட்டது. இந்த ரீ யூனியனில் நாங்கள் ஒருவர் கூட வேலையைப் பற்றி பேசவில்லை. நாங்கள் அனைவரும் Naughty 90 என்ற வாட்ஸ்-ஆப் குழுவில் இருக்கிறோம். இந்த ஐடியாவை நடிகை மகேஷ்வரிதான் முதன் முதலில் அந்த வாட்ஸ்-ஆப் குழுவில் தெரிவித்தார். இப்படி இருக்கும்போது, யார் எல்லாம் ஃப்ரீயாக இருந்தார்களோ அவர்கள் எல்லாம் உடனே டிக்கெட் போட்டு கோவாவுக்கு வந்துவிட்டார்கள். மற்றவர்கள் படங்களுக்கு தேதிகளைக் கொடுத்து விட்டதால் வர முடியவில்லை என்று தெரிவித்தார். இவரது பதிலும் தற்போது இணையவாசிகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் நடிகை ரீமா சென் இந்த ரீ யூனியனில் கலந்து கொண்டது குறித்த பேச்சுகளும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X