மீண்டும் நயன்தாராவை வம்பிழுத்த மாளவிகா மோகனன்.. என்ன தாங்க உங்க பிரச்சினை.. ரசிகர்கள் கேள்வி!
சென்னை : நடிகை நயன்தாரா தென்னிந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்த நாயகியாக உள்ளார்.
அடுத்தடுத்து ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் நயன்தாரா.
கடந்த ஆண்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவிற்கு திருமணம் நடைபெற்று வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகியுள்ளார்.

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா தென்னிந்திய அளவில் முன்னணி நாயகிகளுள் ஒருவராக உள்ளார். அடுத்தடுத்து ரஜினி, அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் ஆன நிலையில், வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் நயன்தாரா.

தொடர்ந்து படங்கள்
திருமணமானால் படவாய்ப்புகள் பாதிக்கும் என நிலையையும் உடைத்தெறிந்துள்ளார் நயன்தாரா. தற்போதும் இறைவன் உள்ளிட்ட 4 படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் கனெக்ட் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று, வசூலையும் குவித்தது.

வம்பிழுக்கும் மாளவிகா மோகனன்
காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பதற்கு நயன்தாராவும் விதிவிலக்கில்லை. நயன்தாரா மீதான சர்ச்சைகளும் அவரை தொடர்ந்து பின்தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் வாடகைத்தாய் முறையில் அவர் குழந்தை பெற்றதும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் சமீபத்தில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனும் நயன்தாரா குறித்த கமெண்ட்ஸ்களை தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

நயன்தாரா விளக்கம்
சாகும் தருவாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் முழு மேக்கப்புடன் நயன்தாரா ஒரு படத்தில் நடித்திருந்ததாக மாளவிகா தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். இதற்கு நயன்தாராவும் விளக்கம் அளித்திருந்தார். அது ஒரு கமெர்ஷியல் படம் என்றும் இயக்குநர் அந்த அளவிற்கு அந்தக் காட்சியில் சோகம் தேவையில்லை என்று கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மீண்டும் சீண்டிய மாளவிகா
இந்நிலையில் தற்போது மீண்டும் மாளவிகா மோகனன் நயன்தாராவை சீண்டியுள்ளார். அவர் தனது சமீபத்திய பேட்டியில், நடிகைகளை லேடி சூப்பர்ஸ்டார் என்று குறிப்பிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். தீபிகா படுகோனே ஒரு சூப்பர்ஸ்டார், ஆலியா பட் ஒரு சூப்பர்ஸ்டார் என்று குறிப்பிடும்படியும் அவர் கூறியுள்ளார்.

பொறாமை காரணமா?
தொடர்ந்து நயன்தாராவை சீண்டிவரும் மாளவிகா மோகனன், அவர் மீதான பொறாமை காரணமாக இவ்வாறு பேசி வருகிறாரா என்று நெட்டிசன்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக, மாளவிகாவின் கமெண்ட்டிற்கு நயன்தாரா பதிலளித்த நிலையில், இந்த கமெண்ட்டிற்கும் பதிலளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











