இப்படியா ஓபனா கேட்குறது.. வாழ்த்திய கையோடு தனுஷிடம் வாய்ப்பு கேட்ட மாஸ்டர் பட நடிகை!

சென்னை: நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொன்ன நடிகை மாளவிகா மோகனன் அவருடன் நடிக்க ஓபனாக வாய்ப்பு கேட்டுள்ளார்.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்தார். இதன்மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த அவர், அடுத்து விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன். அந்த படம் லாக்டவுன் காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

அதிக ரசிகர்கள்

அதிக ரசிகர்கள்

மாளவிகா மோகனன் அதிக படங்களில் நடிக்காவிட்டாலும், நடித்த ஒரு சில படங்களும் டாப் நடிகர்கள் உடன் என்பதால் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார். தற்போது தெலுங்கில் ஹீரோ என்ற ஒரு படத்தை மட்டுமே கைவசம் வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.

தனுஷ் பிறந்தநாள்

தனுஷ் பிறந்தநாள்

இந்த சூழ்நிலையில்தான் நடிகர் தனுஷிடம் வெளிப்படையாக வாய்ப்பு கேட்டுள்ளார். அதாவது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நேற்று தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இதனை முன்னிட்டு தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸானது.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள ஜகமே தந்திரம் படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் செய்யப்பட்டது. தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும் திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இணைப்பார்கள் என நம்புகிறேன்

இணைப்பார்கள் என நம்புகிறேன்

அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் ஒரு அற்புதமான வருடமாக அமைய வாழ்த்துகள் தனுஷ் சார்! உங்களுடன் பணியாற்றுவதில் மிகுந்த உற்சாகம்! (விரைவில் யாராவது ஒரு படத்தில் எங்களை ஒன்றாக இணைப்பார்கள் என்று நம்புகிறேன்) என பதிவிட்டிருந்தார்.

ஓவர் கான்ஃபிடன்ஸ்

ஓவர் கான்ஃபிடன்ஸ்

இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு நாசுக்காக படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்கிறீர்கள் என கமெண்ட் பதிவிட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் இப்படி ஓபனாக கேட்பது என்றும், ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Master Team special Wishes to Thalapathy Vijay | Malavika Mohanan, Anirudh
இந்தி படங்களிலும்

இந்தி படங்களிலும்

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ.மோகனனின் மகள் தான் மாளவிகா மோகனன். மாளவிகா மோகனன் பெரும்பாலும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். அதோடு தமிழ், இந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார் மாளவிகா மோகனன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X