ஹேப்பி பர்த்டே மாளவிகா மோகனன்..இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி!
கொச்சி : தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்டை படத்தில் இணைந்து நடித்து நடிப்பில் தூள் கிளப்பி இருந்தார் நடிகை மாளவிகா மோகனன்.
தற்போது தளபதி விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
தமிழில் ஓரிரு திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் புகழின் உச்சியில் இருக்கும் மாளவிகா மோகனன் ஆகஸ்ட் 4ஆம் தேதியான இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் வாழ்த்துக்களைச் கூறி இணையத்தை தெறிக்க விட்டு கொண்டு வருகின்றனர்.

கே.யு மோகனனின் மகள்
இந்தியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் கே.யு மோகனனின் மகளான மாளவிகா மோகனன் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாகி தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

நடிப்பில் மிரட்டி
இந்நிலையில் சென்ற ஆண்டு பொங்கல் அன்று வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பூங்கொடி எந்த கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மோகனன், அதில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டி இருந்தார்.

விஜய்க்கு ஜோடியாக
மலையாளத்தில் இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்று வந்த நிலையில், தமிழில் பேட்டை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மாளவிகா மோகனன் தற்பொழுது தென்னிந்தியாவின் வசூல் மன்னனாக திகழ்ந்து வரும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

விஜய் தேவரகொண்டா
திரை பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்ததால் இயல்பாகவே நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் மாளவிகா மோகனன், நடித்த சில படங்களிலேயே பாலிவுட் வரை சென்று புகழ்பெற்ற நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் தமிழில் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தெலுங்கில் முன்னணி நடிகராகவும், அதிக பெண் ரசிகைகளை கொண்டு காதல் மன்னனாகவும் வலம் வரும் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு புதிய திரைப்படத்தில் இணைந்து நடித்துவருகிறார்.

"ஹீரோ" திரைப்படத்தின் மூலம்
அர்ஜுன் ரெட்டி, கீதாகோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தற்போது அதிரடி இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் நிலையில், இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் உருவாகிவரும் "ஹீரோ" திரைப்படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து மாளவிகா மோகனன் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
Recommended Video

பிறந்தநாள்
இவ்வாறு நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களின் மூலமும் நம் அனைவரையும் கவர்ந்து வரும் மாளவிகா மோகனன் ஆகஸ்ட் 4 ஆம் தேதியான இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களைக் கூறி இணையதளத்தை தெறிக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











