Malavika Mohanan: ஏம்மா.. எதை வச்சி கிரிக்கெட் விளையாடுற.. மாளவிகா மோகனனை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவைப்பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்
நடிகை மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் என்பதால், தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது.

அவர் பேட்ட படத்தில் ரஜினியின் நண்பராக வரும் சசிக்குமாருக்கு மனைவியாக நடித்திருந்தார். குறைந்த காட்சிகளே வந்தாலும் படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக இது இருந்தது.
நடிகை மாளவிகா மோகன்: பேட்டை படத்தைத் தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பினார் மாளவிகா. விஜய்யின் கேரக்டர் மாற்றத்திற்கு இவரே காரணமாக அமைந்திருந்தார். இந்த படத்திலும் இவருக்கு அதிகமான அதிகமான காட்சிகள் இல்லை. இதைத் தொடர்ந்து தனுஷுடன் மாறன் படத்தில் தன்னுடைய சிறப்பான கேரக்டரை வெளிப்படுத்தினார். ஆனால் இந்தப் படம் மாளவிகாவிற்கு கைக்கொடுக்கவில்லை.

தங்கலான்: தற்போது மாளவிகா, பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உட்பட பலர் நடித்துள்ளனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவாகி உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தபடத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இப்படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

கிண்டலடிக்கும் பேன்ஸ்: இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சற்றுமுன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,தோழி பூக்களால் பந்து போட அதை ஒரு குச்சியை வைத்து பேட்டிங் செய்து கிரிக்கெட் விளையாடுகிறார். கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஏம்மா மாளவிகா எத வச்சிமா கிரிக்கெட் விளையாடுற என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











