தனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: தனுஷின் அடுத்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடிப்பது உறுதியாகியுள்ளது.

நடிகை மாளவிகா மோகனன் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன்.

கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய மாஸ்டர் படம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போயுள்ளது

இந்தி படத்தில் தனுஷ்

இந்தி படத்தில் தனுஷ்

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளார். நடிகர் தனுஷ், வடசென்னை, அசுரன், பட்டாஸ் ஆகிய படங்களுக்குப் பிறகு, தற்போது கர்ணன் படத்திலும், அத்ராங்கி ரே என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார்.

43வது படம்

43வது படம்

அதைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் அடுத்து நடிக்கவுள்ள படம் அவரின் 43 ஆவது படமாகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தப் படத்தை, 'துருவங்கள் பதினாறு', 'மாஃபியா' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கவுள்ளதும், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க இருப்பதும் ஏற்கனவே தெரிந்ததுதான். இந்நிலையில் இந்தப் படத்தின் ஹீரோயின் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

எனக்கு கிடைத்த கவுரவம்

எனக்கு கிடைத்த கவுரவம்

அதன்படி நடிகை மாளவிகா மோகனன், D43 படத்தில் நடிக்கவுள்ளார். இதுதொடர்பாக டிவிட்டியுள்ள நடிகை மாளவிகா மோகனன் உங்களுடன் இணைவது எனக்கு கிடைத்த கவுரவம், இத்தனை ஆண்டுகளாக நீங்கள் தயாரித்துள்ள படங்கள் அற்புதமானவை என்றும் டிவிட்டியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X