விக்ரமை தொடர்ந்து பிரபல ஹீரோவுடன் ஜாய்ன் ஆகும் மாளவிகா மோகனன்.. அவங்களே சொன்ன அப்டேட்!

ஐதராபாத் : நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் என அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் தமிழில் இணைந்து நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.

தற்போது விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகிவரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

தங்கலான் படத்தில் இவருக்கு ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சென்னையில் இவரது காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

நடிகை மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் முதல் படத்திலேயே நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து பரபரப்பை கிளப்பினார். பேட்ட படத்தில் ரஜினியின் நண்பராக வரும் சசிக்குமாருக்கு மனைவியாக நடித்திருப்பார். குறைந்த காட்சிகளே வந்தாலும் படத்தின் முக்கியமான கேரக்டராக அவருக்கு இது அமைந்தது.

விஜய்யுடன் ஜோடி

விஜய்யுடன் ஜோடி

தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பினார் மாளவிகா. விஜய்யின் கேரக்டர் மாற்றத்திற்கு இவரே காரணமாக அமைந்திருந்தார். இந்தப் படத்திலும் இவருக்கு நடிக்க அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து தனுஷுடன் அடுத்தப் படத்தில் நடித்தார்.

தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன்

தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன்

தனுஷுடன் மாறன் படத்தில் தன்னுடைய சிறப்பான கேரக்டரை வெளிப்படுத்தினார். ஆனால் இந்தப் படம் மாளவிகாவிற்கு அந்த அளவிற்கு கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது பா ரஞ்சித் -விக்ரம் காம்பினேஷனில் உருவாகிவரும் தங்கலான் படத்தில் இணைந்துள்ளார் மாளவிகா மோகனன்.

சென்னையில் சூட்டிங்

சென்னையில் சூட்டிங்

தங்கலான் படத்தில் இவருக்கு ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகவும் இதற்காக அவர் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தில் மாளவிகா இடம்பெற்றுள்ள காட்சிகளின் சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை மிகவும் அதிகமாக மாளவிகா எதிர்பார்த்துள்ளார்.

பிரபாசுடன் ஜோடி

பிரபாசுடன் ஜோடி

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களில் கமிட்டாகி வருகிறார் மாளவிகா மோகனன். அடுத்ததாக தெலுங்குப்பட ஹீரோ பிரபாசுடன் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் மாருதி இயக்கவுள்ளதாக தனது சமீபத்திய பேட்டியில் மாளவிகா உறுதிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X