ப்ளீஸ்.. கிழிஞ்ச பாவடையை மாத்திட்டு போங்க.. மாஸ்டர் பட நடிகைக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்!

சென்னை: கோவா செல்ல திட்டம் போட்ட மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் பங்கமாய் அட்வைஸ் செய்துள்ளனர்.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே உச்ச நடிகரான ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார்.

தொடர்ந்து அடுத்த படமான மாஸ்டர் படத்தில் மாஸ் ஹீரோவான விஜயுடன் ஜோடி போட்டார். இந்தப் படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.

வாழ்த்து

வாழ்த்து

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்வதும் கமெண்ட் செய்வதுமாய் உள்ளார். மேலும் நடிகர்கள், நண்பர்கள் பிறந்த நாள் என்றாலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

கோவா போக திட்டம்

கோவா போக திட்டம்

அதேபோல் சினிமா தொடர்பான அப்டேட்டுகள் என்றாலும் உடனே ரியாக்ட் செய்து வருகிறார் மாளவிகா மோகனன். இந்நிலையில் கோவா செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் ஏதாவது ரெக்கமண்டேஷன் உள்ளதா என்று ஏர்பிஎன்பி இந்தியா நிறுவனத்திடம் கேட்டு டிவிட்டியிருந்தார்.

அமேஸிங்

அமேஸிங்

அதற்கு அந்நிறுவனம் கடற்கரைகள், பனை மரங்கள் மற்றும் ஒரு தனியார் நீச்சல் குளம் போன்றவை உள்ள ஒரு வில்லாவை சொல்கிறோம் என பதிலளித்தது. அதற்கு அமேஸிங் என்று ரிப்ளை செய்தார் நடிகை மாளவிகா மோகனன்.

கிழிந்த பாவாடை

கிழிந்த பாவாடை

இதனை பார்த்த நெட்டிசன்கள் பல மாதிரியாக பதில் அளித்துள்ளனர். குறிப்பாக ஒரு நெட்டிசன் ப்ளீஸ் உங்களின் கிழிந்த பாவாடையை மாற்றிக்கொண்டு பிறகு செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக நடிகை மாளவிகா மோகனன், அரைகுறை உடையில் உள்ள போட்டோக்களை ஷேர் செய்ததை தொடர்ந்து அவர் இப்படி ஒரு கமெண்டை பதிவிட்டுள்ளார்.

அவங்களும் போயிருக்காங்க

அவங்களும் போயிருக்காங்க

மற்றொரு நெட்டிசன், எங்க கோவாவா... நாங்க இன்னும் பாம்பன் பாலத்தையே தாண்டல.. போயிட்டு வாங்க.. என டிவிட்டியுள்ளார். மற்றொரு நெட்டிசன் பிரேம்ஜி, ஜெய், வைபவ் ஆகியோரின் கோவா பட போட்டோக்களை ஷேர் செய்து இவர்கள் கோவாதான் போயுள்ளார்கள் நீங்களும் கொண்டாடுங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

நயன்தாரா பயணம்

நயன்தாரா பயணம்

இன்னும் பல நெட்டிசன்கள் நாங்களும் வரலாமா என்றும் கேட்டுள்ளனர். நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் அண்மையில் கோவா டூர் சென்றார். கோவாவில் விடுமுறையை கழித்த நயன்தாரா தனி விமானம் மூலம் அண்மையில் ஊர் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X