தங்கலான்.. ஐந்து மணிநேரம் மேக்கப் போடும் மாளவிகா மோகனன்!

சென்னை: தங்கலான் படத்திற்காக நடிகை மாளவிகா மோகனன் ஐந்து மணி நேரம் மேக்கப் போடுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இப்படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

actress malavika mohanan shared thangalaan movie BTS photos

தங்கலான்: பொன்னியின் செல்வன் படத்துக்குப்பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

காயமடைந்த விக்ரம்: நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேஜிஎஃப் பகுதியில் அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது விக்ரம் காயத்திலிருந்து குணமடைந்துள்ளார்.

actress malavika mohanan shared thangalaan movie BTS photos

இறுதிகட்ட படிப்பிடிப்பு: அதன்படி, படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இந்த மாதம் 17ந் தேதி தொடங்குகிறது. மொத்தம் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ள நிலையில், ஜூலை முதல் வார இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என கூறப்படுகிறது. இப்படத்தின் டிரைலரைப் பார்த்து மிரண்டு போன பேன்ஸ் இப்படத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஐந்து மணிநேரம் மேக்கப்: இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பில் இருக்கும் மாளவிகா தனது ட்விட்டர் பக்கத்தில் தங்கலான் படத்திற்காக மேக்கப்போட்டு ரெடியாகும் புகைப்படத்தை பகிர்ந்து படத்திற்காக நான்கு முதல் ஐந்து மணி நேரம் மேக்கப் மற்றும் காஸ்ட்யூமிற்காக தேவைப்படுகிறது. அவ்வளவு நேரம் அசையாமல் அமர்ந்திருப்பது சவாலாக இருக்கிறது. ஆம், உங்கள் கேமரா ரோலில் உள்ள பெரும்பாலான BTS புகைப்படங்கள் இப்படிதான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X