எதை செய்யலாம்… எதை செய்யக்கூடாது… மாஸ்டர் நாயகியின் அதிரடியான கேள்வி !

சென்னை : கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடிகை மாளவிகா மோகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சென்னை ஓமந்தூரர் மருத்துவமனையின் டீனுடன் கலந்துரையாடினார்.

நடிகை மாளவிகாவின் கொரோனா குறித்த பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

3,57,229 பாதிப்பு

3,57,229 பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833 ஆக அதிகரித்திருக்கிறது.

21,223 பேர் பாதிப்பு

21,223 பேர் பாதிப்பு

தமிழகத்திலும் கொரோனாவின் பரவல் கட்டுங்கடங்காமல் உள்ளது. இதனால் நாளை முதல் புதிய கட்டுப்பாடுங்கள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நேற்று மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரத்து 512 பேருக்கு மேற்கொண்ட சோதனையில் 21,228 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு வீடியோ

சென்னை மாநகராட்சி கொரோனா விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் டீன் ஜெயந்தி கலந்து கொண்டார். இவர் 30 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் அனுபவமுள்ளவர்.

10 நாள் காய்ச்சல்

10 நாள் காய்ச்சல்

இந்நிலையில், அந்த விழிப்புண்ர்வு வீடியோவை நடிகை மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நடிகை மாளவிகா மோகனன் கொரோனா அச்சத்தைப்போக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில், டீன் ஜெயந்தி அவர்கள், கொரோனா 2வது அலையில் காய்ச்சல் 5 முதல் 10 நாள் வரை இருப்பதாகவும், வெளியில் செல்லும் போது மாஸ்க், கைகளை கட்டாயம் கழுவ வேண்டும் என்றும் கூறினார்.

தடுப்பூசி கட்டாயம்

தடுப்பூசி கட்டாயம்

மாளவிகாவின் தடுப்பூசி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தடுப்பூசி மிகவும் அவசியமான ஒன்று என்றும், அதை தகுதியானவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும் அப்போதுதான் உயிரிழப்பு போன்ற பெரிய பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள் முடியும் என்றும் டீன் ஜெயந்தி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X