அடேங்கப்பா.. அந்த உச்ச நடிகர் கூடவும் நடிக்கனுமாம்.. மாஸ்டர் நாயகியின் மாஸ் கனவு!

சென்னை: மாஸ்டர் பட நாயகியான மாளவிகா மோகனன் மேலும் ஒரு உச்ச நடிகருடன் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

Recommended Video

Malavika Mohanan நடிச்ச ஒரு Sceneகு 1000 Memes | Master Malavika, JD

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.

அந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பூங்கொடி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் மாளவிகா மோகனன்.

மாஸ்டர் படத்தில் ஜோடி

மாஸ்டர் படத்தில் ஜோடி

இதனை தொடர்ந்து தனது அடுத்த படத்திலேயே தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். விஜய்யுடன் அவர் இணைந்து நடித்த மாஸ்டர் படம் பெரும் ஹிட்டானது.

டாப் நடிகையான மாளவிகா

டாப் நடிகையான மாளவிகா

அந்த படத்தில் மாளவிகா மோகனனுக்கு நடிக்க பெரிதாக ஸ்கோப் இல்லாவிட்டாலும் இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் இணைந்து டாப் நடிகையானார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

தனுஷிடம் வாய்ப்பு கேட்டு

தனுஷிடம் வாய்ப்பு கேட்டு

நடிகர்கள் யாருக்கேனும் பிறந்த நாள் என்றாலும் டிவிட்டரில் வாழ்த்து கூறி வருகிறர். அந்த வகையில் தனுஷின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய கையோடு அவருடன் நடிக்க ஆர்வமாய் இருப்பதாய் கூறினார்.

அடித்த அதிர்ஷ்டம்

அடித்த அதிர்ஷ்டம்

அதன் பலனாக கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷின் டி43 படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் மாளவிகா மோகனன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இருவரின் காம்பினேஷன்

இருவரின் காம்பினேஷன்

இந்நிலையில் ரசிகர் ஒருவர் மாளவிகா மோகன் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவின் போட்டோவை பதிவிட்டு இந்த காம்பினேஷனை ஸ்க்ரீனில் காண யாரெல்லாம் காத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

விருப்பத்தை சொன்ன நடிகை

விருப்பத்தை சொன்ன நடிகை

அதற்கு முதல் ஆளாய் நான் என பதில் அளித்துள்ளார் மாளவிகா மோகனன். இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியே நடிகரின் படங்களில் எல்லாம் வாய்ப்பை பெற்று விடுவீர்கள் போலயே என்று கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X