Mamitha baiju: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தில் இணையும் பிரேமலு நடிகை.. அட க்யூட் காம்பினேஷன்தான்!
சென்னை: நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்த பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் படத்தின் பிஜிஎம்-மிலாவது யுவன் கலக்குவாரா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
படத்தின் ட்ரெயிலர் படத்தின் ரிலீஸுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனிடையே ஆகஸ்ட் 15ம் தேதியையொட்டி படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமும் அவரது இறுதி படமுமான தளபதி 69 படம் குறித்த அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு டைரக்ஷனில் இணைந்து நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தன்னுடைய போர்ஷன்களை நிறைவு செய்துள்ள விஜய், தொடர்ந்து டப்பிங் பணிகளையும் முடித்துக் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில பேட்ச் வேலைகளை வெங்கட் பிரபு மேற்கொண்டு வரும் நிலையில் இந்த படத்தின் மூன்று சிங்கிள்கள் யுவன் சங்கர் ராஜா இசையில் அடுத்தடுத்து வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை வொர்க் அவுட் ஆகவில்லை என்று ரசிகர்களும் விமர்சகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கோட் படம்: இந்நிலையில் கோட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய், தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தப் படம் குறித்த அறிவிப்பு அடுத்ததாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்திலேயே விஜய் பிறந்தநாளை ஒட்டி இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்த படத்தின் அறிவிப்பை தாமதப்படுத்தி வருகிறார் விஜய். படத்தை இயக்க உள்ளது ஹெச் வினோத் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வருகிறது.
விஜய்க்கு ஜோடியாகும் மமிதா பைஜு: இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பிரபல மலையாள இளம் நடிகை மமீதா பைஜூ நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் விரைவில் படம் குறித்த அறிவிப்பும் ஹீரோயின் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக இந்த படத்தின் நாயகிகளாக சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டது. படம் அரசியல் சார்ந்த படமாக தளபதி 69 படம் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கான ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து விட்டு ஹெச் வினோத் காத்திருக்கும் சூழலில் விரைவில் படத்தின் அறிவிப்பை மேற்கொண்டு படக்குழுவினர் ஷூட்டிங்கை துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
பிரேமலு படம்: பிரேமலு உள்ளிட்ட படங்களில் தன்னுடைய க்யூட்டான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் மமிதா பைஜூ. தமிழில் வணங்கான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் மமிதா. இவரது பிரேமலு படம் காதல் மற்றும் காமெடியை மையமாக கொண்டு வெளியாகி ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இந்தப் படம் இணைந்தது.இந்தப் படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கிலும் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











