GOAT மோதிரத்துடன் தெறிக்க விட்ட விஜய்.. லவ் எமோஜியை பறக்கவிட்ட மமிதா பைஜு!

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். பிரம்மாண்ட செட் போடப்பட்டு இந்தப் பூஜை நடந்துவரும் நிலையில், இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

கடந்த மாதத்தில் விஜய்யின் கோட் படம் சர்வதேச அளவில் திரையரங்குகள்ல வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வசூலை குவிக்க தவறவில்லை. சர்வதேச அளவில் இந்தப் படத்தின் வசூல் 500 கோடி ரூபாயை தொட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றைய தினம் படம் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.

vijay goat movie mamitha baiju

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களில் நடித்து மாஸான ஹீரோவாக, தளபதியாக தன்னை நிரூபித்தவர். தற்போது அரசியலில் என்ட்ரி கொடுக்கும் அவர் அங்கும் தன்னை நிரூபிக்கும் அடுத்தடுத்த பணிகளை தொடர்ந்து வருகிறார். இந்த மாத இறுதியில் அவரது கட்சி மாநாடு நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையில் இன்றைய தினம் விஜய்யின் இறுதிப் படமான தளபதி 69 படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பிரமாண்டமான செட்டுடன் இந்த பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதில் விஜய் உள்ளிட்ட பட குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

GOAT மோதிரத்துடன் விஜய் போஸ்: இதனிடையே, இன்றைய தினம் தனது இன்ஸ்டாகிராமில் கோட் என்ற மோதிரத்துடன் சிறப்பான போஸ் கொடுத்து நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை கவர்ந்துள்ளார். விஜய்யின் கோட் படம் கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சிறப்பான வசூலை பெற்றுள்ளது. படம் 500 கோடி ரூபாய் வசூலை சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் எட்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றைய தினம் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் மற்றும் இன்றைய தினம் தளபதி 69 படத்தின் பூஜை என அடுத்தடுத்த அதிரடிகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார் விஜய்.

லைக் செய்த மமிதா பைஜு: இதை கொண்டாடும் வகையில் தான் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கோட் மோதிரத்துடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தெறிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படத்திற்கு லவ் எமோஜி கொடுத்துள்ளார் தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ள மமிதா பைஜு. முன்னதாக மலையாளத்தில் பிரேமலு உள்ளிட்ட படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த மமிதா, தமிழில் தளபதி 69 படத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளார். முதல் படத்திலேயே அதிரடியாக விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

தளபதி 69 பட பூஜை: இன்றைய தினம் தளபதி 69 படத்தின் பூஜை நடத்தப்பட்டுள்ள நிலையில் நாளை இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் பாடல் காட்சியுடன் துவங்க உள்ளது. இதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் பிரமாண்ட செட்டில் நடத்தப்பட உள்ள இந்த பாடல் காட்சி, தொடர்ந்து ஒரு வார காலம் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட சூட்டிங் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று தெரிகிறது. இந்த மாதத்திலேயே கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ், தளபதி 69 படத்தின் பூஜை மற்றும் ஷூட்டிங் துவக்கம், தன்னுடைய கட்சியின் மாநாடு என அடுத்தடுத்த வேலைகளில் விஜய் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X