அருந்ததியில் நடித்திருக்க வேண்டியது நான்தான்.. பிரபல மலையாள நடிகை புலம்பல்
திருவனந்தபுரம்: அருந்ததி படத்தில் அனுஷ்கா நடித்த ஜக்கம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் நான்தான் கமிட் ஆனேன் என நடிகை மம்தா மோகன்தாஸ் தெரிவித்திருக்கிறார்.
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் அனுஷ்கா. கடந்த 2005ஆம் ஆண்டு பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான சூப்பர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். யோகா ஆசிரியையாக இருந்த அனுஷ்கா தனது முதல் படத்திலேயே அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

மெகா ஹிட்டான அருந்ததி
சூப்பர் படத்துக்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் அனுஷ்காவுக்கு பெரிதாக எந்த திருப்புமுனையும் ஏற்படவில்லை. இதனால் எப்படியாவது ஒரு மெகா ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். அப்படிப்பட்ட சூழலில் அருந்ததி பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். கோடி ராமகிருஷ்ணா இயக்கிய இந்தப் படமானது தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங்கும் செய்யப்பட்டது. வெளியான அனைத்து மொழிகளிலும் படம் மெகா ஹிட்டானது.

டாப் ஹீரோயின் ஆன அனுஷ்கா
அருந்ததி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு அனுஷ்காவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்தார். குறிப்பாக வெறும் கிளாமர் ரோலில் மட்டும் நடிக்காமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்ததால் அனுஷ்காவுக்கு பலர் ரசிகர்களாக மாறினர். மேலும் ராஜமௌலில் இயக்கத்தில் அவர் நடித்த பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் அவரை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்தது. ஆனால் உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். தற்போது புதிய படத்தில் நடித்துவருகிறார்.

மம்தா மோகன்தாஸின் புலம்பல்
இந்நிலையில் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மம்தா மோகன்தாஸ் அருந்ததி படம் குறித்து பேசியிருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "அருந்ததி படத்தில் நடிப்பதற்கு நான் தான் முதலில் கமிட்டானேன். ஆனால் எனது மேனேஜர் அருந்ததி படத்தை அந்த தயாரிப்பாளர் பாதியிலேயே நிறுத்திவிடுவார். படத்தை முழுமையாக முடிக்கும் அளவுக்கு அவரிடம் பணம் இல்லை என்றார். அதனை நம்பி படத்திலிருந்து வெளியேறிவிட்டேன்.

ராஜமௌலி மம்தாவுக்கு செய்த அறிவுரை
அந்த சமயத்தில் விழா ஒன்றில் இயக்குநர் ராஜமௌலியை சந்தித்தேன். அப்போது அவரிடம், அருந்ததி படத்தின் தயாரிப்பாளர் மீது நம்பிக்கை இல்லை என என் மேனேஜர் கூறியதால் அந்தப் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறினேன். அதற்கு ராஜமௌலி, "மம்தா நீங்கள் தெலுங்கு கேரியரில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டீர்கள். அந்தப் படத்தில் நடித்த பிறகு அனுஷ்காவின் வாழ்க்கையே மாறிவிட்டது' என ராஜமௌலி தன்னிடம் கூறியதாக அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.

நோயோடு போராடும் மம்தா மோகன் தாஸ்
மம்தா மோகன் தாஸ் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழில் சிவப்பதிகாரம், தடையற தாக்க, குரு என் ஆளு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். திரையுலகில் பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் கேன்சர் நோயால் அவதிப்பட்டார். தற்போது ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











