மக்கள் கொடுக்கல! சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் அவங்களாகவே.. நயன்தாராவை விளாசிய மம்தா மோகன்தாஸ்!
சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தில் நடித்திருக்கும் நடிகை மம்தா மோகன்தாஸ், தமிழ் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா உலகத்தில் திறமையான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கின்றார். மகாராஜா படம் தொடர்பான புரோமோஷனில் தொடர்ந்து பிஸியாக இருந்துவரும், மம்தா மோகன்தாஸ், புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளவர் என்பது பலருக்கும் தெரியாது. ஆம்.. எனவேதான் சினி உலகில் மோகன்தாஸ் ஒரு தைரியமான பெண்ணாக அறியப்படுகிறார்.
இந்நிலையில் தமிழில் உள்ள பல்வேறு முன்னணி யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துவரும் மம்தா மோகன்தாஸ் தனது சினிமா வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து வருகின்றார். அண்மையில் ஒரு பேட்டியில் கூட, ராஜமௌலி படத்தில் நடித்தபோது அவர் தன்னை கிளாமராக உடை அணியும்படி கூறியதாக கூறியிருந்தது இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தை யாரவது இந்தி சினிமா என்றோ அல்லது இந்திய சினிமா என்றோ கூறினால் அதனை மறுத்து, ஆர்.ஆர்.ஆர் படம் தென்னிந்திய சினிமா என பதில் கூறுவேன் எனக் கூறுவதாகவும் கூறினார்.

குசேலன் படம்: இந்நிலையில் குசேலன் படத்தில் நடித்தபோது தனக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை குறித்து ஏற்கனவே பேசியிருந்தார். அதில், குசேலன் படத்தில் நயன்தாராவுக்கே முக்கியமான ரோல் கிடையாது. ஒரு பாடல் காட்சியில் நான் நடிக்க வேண்டும் என்பதால் நான் நடித்துக் கொண்டு இருந்த படத்தின் இயக்குநரிடம் அனுமதி கேட்டு நான்கு நாட்கள் வந்திருந்தேன். முதல் நாளே எனக்கு தெரிந்து விட்டது ஏதோ ஒன்று சரியில்லை என. மேலும், அடுத்த இரண்டு நாட்களும்

அமைதியாக இருக்க காரணம்: அதன் பின்னர்தான் எனக்கு விஷயம் தெரியவந்தது. இப்போது இருப்பதைப் போல் சமூக வலைதளங்கள் அப்போது இருந்திருந்தால், நயன்தாராவை நான் அப்போதே கடுமையாக விமர்சித்திருப்பேன். இதுபோன்ற சமூக வலைதளங்கள் இல்லாத காரணத்தால் அமைதியாக இருந்துவிட்டேன்.
நன்றி சொன்ன ரஜினி: சில வாரங்களுக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. என்னிடம் பேசிய சூப்பர் ஸ்டார், ரொம்ம நன்றி எனக்கூறினார். அதாவது ஷூட்டிங்கிற்கு வந்ததற்காக நன்றி எனக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். என்ன நடந்தது என ரஜினிசாருக்கும் தெரியும் என நினைக்கின்றேன். அதனால்தான் அவர் எனக்கு போன் செய்து நன்றி கூறியுள்ளார். இல்லையென்றால் அவர் ஏன் கூறவேண்டும் எனக் மம்தா மோகன்தாஸ் ஏற்கனவே கூறியிருந்தார்.

லேடி சூப்பர் ஸ்டார்: இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், "எனக்கு தயாரிப்பாளர்கள் செலவு செய்யும் பணத்தின் மதிப்பு தெரியும். ஒரு சிலர் தன்னை பெரிய ஆர்டிஸ்ட்டாக காட்டிகொள்வதற்கு ஏழு , எட்டு அசிஸ்டண்டுகளை வைத்துக் கொள்கின்றனர். இது தேவையற்றது. நான் இரண்டு அசிஸ்டண்ட்கள் மட்டுமே வைத்துள்ளேன். ஒரு சிலர் தங்களைத் தாங்களே புரோமோட் செய்து கொள்கின்றனர். குறிப்பாக தனது பி.ஆர். டீமிடம் கூறி 10 பேப்பர்களில் சூப்பர் ஸ்டார் என எழுத வைக்கின்றனர். சூப்பர் ஸ்டார் பட்டம் மக்களாக கொடுக்க வேண்டும். அவர்களாகவே போட்டுக்கொள்கின்றனர்" எனக் கூறியுள்ளார். நடிகை நயன்தாராவை நடிகை மம்தாமோகன்தாஸ் கடுமையாக விமர்சித்துள்ளது சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











