48 வயதில் பெண் குழந்தையை தத்தெடுத்த சிம்பு பட நடிகை.. ஃபேமிலி போட்டோவை வெளியிட்டு உருக்கம்!

சென்னை: 48 வயதில் பிரபல நடிகை ஒருவர் பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார்.

நடிகை மந்த்ரா பேடி சாந்தி என்ற தொலைக்காட்சி சீரியலின் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த போதும் பல்வேறு இன்டர்நேஷனல் கிரிக்கெட்டு போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தொகுப்பாளராகவும் இருந்தார்.

மன்மதன்

மன்மதன்

இதன்மூலம் பெரும் பிரபலமானார் மந்திரா பேடி. தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததால் பிஸியானார். கடந்த 2004ஆம் ஆண்டு தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மன்மதன்' படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

வெப் தொடர்

வெப் தொடர்

கடந்த ஆண்டு வெளியான ‘சாஹோ' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் மந்திரா பேடி. அவ்வப்போது மாலத்தீவில் ஓய்வை கழித்து வருகிறார் மந்த்ரா பேடி.

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து திணறடிப்பார். குறிப்பாக பிகினியில் அவர் காட்டும் கவர்ச்சி கிறங்க வைக்கும். இந்நிலையில் நடிகை மந்திரா பேடி, தனது சமூக வலைதள பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குழந்தையை தத்தெடுத்து நடிகை

குழந்தையை தத்தெடுத்து நடிகை

அதாவது மந்திரா பேடி தனது கணவர் ராஜ் கவுஷலுடன் சேர்ந்து பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு தாரா பேடி கவுஷல் என்று பெயரிட்டுள்ளனர். இந்த தம்பதி தங்களின் மகன் வீர் மற்றும் மகள் தாராவுடன் இருக்கும் ஃபேமிலி போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மந்திரா பேடி.

தாரா வீட்டிற்கு வந்திருக்கிறாள்

தாரா வீட்டிற்கு வந்திருக்கிறாள்

இதுதொடர்பாக மந்திரா பேடி பதிவிட்டிருப்பதாவது, மேலிருந்து ஒரு ஆசீர்வாதம் போல அவள் எங்களிடம் வந்திருக்கிறாள். எங்களின் சின்ன பெண், தாரா. நான்கு வயது மற்றும் ஒரு பிட். நட்சத்திரங்களைப் போல பிரகாசிக்கும் கண்களால் சகோதரியை தனது வீட்டிற்கு வரவேற்றுள்ளார் வீர்.

ஃபேமிலி போட்டோ

ஃபேமிலி போட்டோ

திறந்த கைகள் மற்றும் தூய அன்புடன். நன்றியுணர்வு, நன்றி. ஆசிர்வதிக்கப்பட்ட தாரா பேடி கவுஷல் 2020 ஜூலை 28 அன்று எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக ஆனார்'' இவ்வாறு மந்திரா பேடி தனது ஃபேமிலி போட்டோவை ஷேர் செய்து பதிவிட்டுள்ளார்.

பெருமைபடுகிறோம்

பெருமைபடுகிறோம்

இதனை பார்த்த பலரும் மந்திரா பேடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலு சிலர் உங்களின் இந்த செயல் ரொம்பவே அற்புதமானது, உங்களால் நாங்கள் பெருமையடைகிறோம் என்றும் பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X