தாரா' அடி பொலிக்க வந்நல்லே.. வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியார் என்ன ரோல்!
சென்னை: ஜெயிலர் படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இரண்டாவது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம், அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்பேட்டை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மஞ்சு வாரியர் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரஜினி, ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் வேட்டையன்.இப்படத்தில் ரஜினியோடு இணைந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு அமிதாப் பச்சன் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திலிருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட 'மனசிலாயோ' பாடல் இணையத்தில் பெரும் வைரலானது. இந்த பாடலை ஓணம் பண்டிகையை அனைவரும் ரீல்ஸாக வெளியிட்டு அசத்தினர்.

வேட்டையன்: இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, திருநெல்வேலி, மும்பை, சென்னை என பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து, தற்போது டப்பிங் பணி நடந்து வருகிறது. இசை வெளியீட்டு விழா வருகிற 20ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த இசைவெளியீட்டு விழாவில் ரஜினி என்ன பேச போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
அடி பொலிக்க வந்தல்லோ: இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திரத்தின் லுக் போஸ்டரை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. அதில், ரித்திகா ரூபா என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதையடுத்து, துஷாரா விஜயன் போஸ்டரை படக்குழு நேற்று வெளியானது. இதில், அவர் சரண்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது, மஞ்சு வாரியர் கதாபாத்திரம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், மஞ்சு வாரியர், தாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கூலி: வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திற்கு நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில், சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் இதில் நடிக்கின்றனர். 'தேவா' என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்


Click it and Unblock the Notifications











