சென்னையில் படிச்சு மருத்துவரான மஞ்சு வாரியர் மகள்.. இன்ஸ்டாகிராமில் வேறலெவலில் மிரட்டுறாங்களே!

சென்னை: நடிகை மஞ்சு வாரியர் தனது பெயருக்கு பெருத்தமானவர் என்பதைப் போல் மிகவும் தைரியமான போராட்ட குணம் கொண்ட பெண் என்றே கூறலாம். மலையாளம் மற்றும் தமிழில் தற்போது தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகின்றார் மஞ்சு வாரியர். மஞ்சு வாரியர் மலையாள நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மீனாட்சி திலீப் என்ற மகள் ஒருவர் உள்ளார். மீனாட்சி திலீப் தற்போது சென்னையில் தனது மருத்துவப் படிப்பினை படித்து முடித்துள்ளார்.

மஞ்சு வாரியர் மற்றும் திலீப் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்நிலையில் அவர்களது மகள் மீனாட்சி அப்பா உடன் அதாவது திலீப்புடன் சென்றுவிட்டார். அதன் பின்னர் முழுக்க முழுக்க தனது அப்பாவுடன் இருந்து வரும் மீனாட்சி தனது விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வரும்போது திலீப்புடன் இணைந்து சினிமா நிகழ்ச்சிகள் தொடங்கி பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Manju Warrier

காவ்யா மாதவன் வாழ்த்து: அதேபோல் மஞ்சு வாரியருடன் விவாகரத்து பெற்ற பின்னர் திலீப் சிறிது காலம் தனியாக மகளுடன் வாழ்ந்து வந்தார். ஆனால் அதன் பின்னர் காவ்யா மாதவனுடன் வாழ்ந்து வருகின்றார். மீனாட்சி திலீப் மருத்துவ பட்டம் பெறும்போது சென்னைக்கு வந்திருந்த காவ்யா மாதவன், மீனாட்சியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

போஸ்ட்: மேலும் அந்த புகைப்படத்திற்கு, " வாழ்த்துகள் மருத்துவர் மீனாட்சி கோபாலகிருஷ்ணன். நீ சாதித்து விட்டாய். உனது கடின உழைப்பு உன்னை இங்கு கொண்டுவந்துள்ளது. நீ மருத்துவர் பட்டம் பெறுவதற்கு மிகவும் தகுதியானவள். நாங்கள் உன்னால் இன்று மிகவும் பெருமையாக உணர்கின்றோம். கடவுள் உனக்கு எக்கச்சக்க ஆசீர்வாதங்களைக் கொடுக்கட்டும்" என பதிவிட்டுள்ளார்.

Manju Warrier

திலீப்: தற்போது மீனாட்சி திலீப் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் படித்து மருத்துவராகியுள்ளார். மகள் பட்டம் பெற்ற புகைப்படத்தினை நடிகர் திலீப் பகிர்ந்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் தனது மகள் பட்டம் பெற்ற பின்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினைப் பகிர்ந்த திலீப் அதில், " கடவுளுக்கு நன்றி. கனவு நனவாகிவிட்டது. எனது மகள் மீனாட்சி மருத்துவர் ஆகிவிட்டார். எனது மகள் மீது அன்பும் மரியாதையும் கூடுகின்றது" என பொருள்படும் படி எழுதியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் மட்டும் இல்லாமல், கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Manju Warrier

நீட் தேர்வு: ஆனால் மீனாட்சி தான் மட்டும் இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மீனாட்சி நீட் தேர்வு எழுதியிருந்தபோது நடிகர் திலீப் ஊடகங்களிடம் பேசுகையில், எனது மகள் மீனாட்சி நீட் தேர்வினை நன்றாகவே எழுதியுள்ளார். நாங்கள் அவளுக்காக தொடர்ந்து பிராத்தனை செய்து வருகின்றோம். நான் எப்போது வேண்டுமனாலும் ஓய்வு பெறும் துறையில் பணி புரிகின்றேன். மேலும் எனது மகளின் பெயருக்கு முன்னால், மிஸ் அல்லது மிஸ்சஸ் என இருக்காது மாறாக மருத்துவர் என இருக்கும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Manju Warrier

தற்போது மருத்துவராகியுள்ள மீனாட்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு லட்சத்து 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X