Viduthalai 2: விஜய் சேதுபதியை வெட்கப்பட வைத்த மஞ்சு வாரியர்.. இப்படி ஒரு விஷயம் நடந்துருக்கா?

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை 2 படத்தின் ரிலீசுக்காக அடுத்ததாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் சூரியும் கான்ஸ்டபள் குமரேசன் கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோருக்கு படம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் விஜய் சேதுபதியை லீடாக வைத்து விடுதலை 2 படத்தை வெற்றிமாறன் உருவாக்கியுள்ளார்.

vijay sethupathi manju warrier viduthalai 2 movie


விடுதலை 2 படம்: நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென், சேத்தன், பிரகாஷ்ராஜ், மூணார் ரமேஷ், பவானிஸ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், போஸ் வெங்கட் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை 2 படம் இன்னும் சில தினங்களில் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வுகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இரண்டாவது பாகத்தை மேலும் பிரம்மாண்டம் மற்றும் மெனக்கெடல்களுடன் உருவாக்கியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதியின் வாத்தியார் கேரக்டர் மிகப்பெரிய வடிவத்தை பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி -மஞ்சு வாரியர் ஜோடி: கடந்த ஆண்டில் வெளியான விடுதலை படத்தில் வாத்தியார் கேரக்டரில் கேமியோ ரோலிலேயே நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள விடுதலை 2 படத்தில் அவரது கேரக்டர்தான் முழுமையாக ஆக்ரமிப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது இளவயது கெட்டப் மறறும் மஞ்சு வாரியருடனான ரொமான்ஸ் போன்றவை ட்ரெயிலர் மற்றும் பாடல்களில் வெளியாகியுள்ளது. கூடவே இளையராஜாவின் இசைமெட்டும் இவர்களது காதலுக்கு தினந்தோறும் என துணை நிற்க, தனியான கவனத்தை இந்த காதல் பெற்றுள்ளது. படத்தின் ட்ரெயிலரில் விஜய் சேதுபதியின் கேரக்டர் தனி கவனத்தை பெற்றுள்ளது. படத்திலும் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

நிறைவேறிய மஞ்சு வாரியர் ஆசை: இந்தப்படத்தின்அடுத்தடுத்த பிரமோஷன்களில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் இணைந்து கொடுத்த பேட்டியொன்றில் படத்தின் நாயகன் விஜய் சேதுபதி குறித்தும் கேரளாவில் அவருக்கு இருக்கும் கிரேஸ் குறித்தும் மஞ்சு வாரியர் பேசியுள்ளார். தனக்கு தொடர்ந்து போராட்டம் இவற்றையொட்டிய கேரக்டர்களே நடிக்க கிடைத்ததாகவும் ரொமாண்டிக் படத்தில் நடிக்க வேண்டும் என்று தனக்கு ஆசையாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அது விடுதலை 2 படத்தின்மூலம் தற்போது நிறைவேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியின் கிரேஸ்: இதனிடையே சமீபத்தில் கேரள பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு குறித்தும் அவர் பேசியுள்ளார். கேரள பெண்களிடம் அவர்களுக்கு பிடித்த ரொமாண்டிக் ஹீரோ குறித்த நடத்தப்பட்ட இந்த ஆய்வில் விஜய் சேதுபதி தான் லீடிங் என்றும், கமெண்டிலும் விஜய் சேதுபதியின் பெயரே அதிகமாக அடிபட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பெண்களின் கற்பனையில் உள்ள மனிதராக விஜய் சேதுபதி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். அவர் இதைக் கூற, பக்கத்தில் இருந்த விஜய் சேதுபதி தனக்கு வெட்கம் வருவதாக கூறுவதாக இந்த வீடியோவில் காணப்பட்டது. தொடர்ந்து தன்னை க்ளோசப்பில் வைக்க வேண்டாம் என்று கேமரா மேனிடம் கூறுவதாகவும் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X