சூப்பர் ஸ்டார் படம் என்பதால் வேட்டையனில் நடிக்கவில்லை - என்னங்க மஞ்சு வாரியர் இப்படி சொல்லிட்டாங்க
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் என்றால அது வேட்டையன் படம் தான். அந்த படத்தினை ஜெய் பீம் படத்தினை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடந்து முடிந்தது. படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முற்றிலுமாக முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் டப்பிங்கிற்கு வராமல் காலம் தாழ்த்துவதாக கிசுகிசுக்கள் எழுந்தது. குறிப்பாக, லால் சலாம் படத்தின் மூலம் லைகா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை, வேட்டையன் படத்தின் சம்பளத்தில் ஈடு செய்யவேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் பேசியதாக கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு சூப்பர் ஸ்டார் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என கூறப்படுகின்றது. இந்த பஞ்சாயத்தினால் படத்தின் டப்பிங்கிற்கு சூப்பர் ஸ்டார் வரவில்லை என கிசுகிசுக்கள் கிளம்பியது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமானது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறி வெச்ச இறை விழனும் என பேசும் வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் படம் குறித்து மிகப்பெரிய அப்டேட்டுகள் எதுவும் வரவில்லை. மாறாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் கூலி படத்தின் அப்டேட்டுகள்தான் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்துள்ள மஞ்சு வாரியர் கேரளாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது படம் குறித்து பேசினார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்களில் ஒரு தரப்பினை கொஞ்சம் அதிருப்தி அடையச் செய்துள்ளது.

சூப்பர் ஸ்டார்: அதாவது வேட்டையன் படம் குறித்த கேள்விக்கு, " நான் வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவியாக நடிக்கின்றேன். எனக்கு முதலில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்றார் எனத் தெரியாது. நான் ஜெய் பீம் என்ற தரமான படத்தினை எடுத்த ஞானவேல் சாரின் படம் என்பதால் இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டேன். எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜோடியாக நடிக்கின்றேன் என்பதை விடவும், ஞானவேல் என்ற இயக்குநரின் படத்தில் நடிக்கின்றேன் என்ற பொறுப்பு மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், ஜெய் பீம் படத்தினை எடுத்த ஞானவேல் படத்தில் நடிப்பதுதான் எனக்கு மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

அனிருத்: படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் போய்க்கொண்டு உள்ளது. படம் நிச்சயம் பலருக்கும் பிடிக்கும்” என கூறியுள்ளார். வேட்டையன் படத்தின் எந்தவிதமான அப்டேட்டும் இல்லாத நிலையில் மஞ்சு வாரியரின் இந்த அப்டேட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். படத்தின் முதல் பாடல் எப்போது வரும் என ரசிகர்கள் அனிருத்தின் சமூக வலைதளப்பக்கத்தை எப்போதும் பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











